கள்ளக் குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் விரும்பத்தாக வன்முறை வெடித்தது வருத்தத்திற்குரியது. ஆனால், நடந்த வன்முறைக்கான பழியை ஒட்டு மொத்தமாக அறச் சீற்றத்துடன் அணி சேர்ந்த மக்கள் மீதும், முற்போக்கு இயக்கங்கள் மீதும் போட்டு, சகட்டுமேனிக்கு கைது செய்வதன் மூலம் தங்கள் பலவீனங்களை அரசு நிர்வாகமும், காவல்துறையும் மறைத்துவிட்டு, யார், யாரையோ திருப்திபடுத்த துடிக்கின்றனவா? அநீதிக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள், வன்முறை கும்பல் என்ற அடைமொழிகளில்  முக்கியமான மெயின்ஸ்டீரிம் பத்திரிகைகள் எழுதுகின்றன. 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு பள்ளி மக்களிடம் ...

அருணாராய் மிகச் சிறந்த சமூக சேவகர்!. மஸ்தூர் கிசான் ஷக்தி சங்கதான் இயக்கத்தின் வழி நமக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தில் பெற்றுத் தந்தவர். பல கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பை தந்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இவரது முயற்சியின் பலனே! 40 ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் பலவற்றில் இயங்கி வரும் அருணாராய் சென்னையில் தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்து, வட இந்தியாவில் வளர்ந்தவர்! ‘தி வயர்’ இணைய தளத்தில் வெளியான அவரது ...