தமிழகத்தில் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு தினசரி 80 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வரும் திங்களன்று (செப்டம்பர் 13) நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒரே நபருக்கு அந்த ஆர்டரைத் தராமல் பரவலாக பகிர்ந்து தரலாம் என தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது! தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப் பண்ணைகள் உள்ளன. அவர்கள் இந்த டெண்டரில் நேரடியாக பங்கு பெற முனைப்பு காட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு ‘லாபி’ செய்வதாகத் தெரிய ...
இன்றைய தினத்தந்தி , தினகரன் நாளிதழ்களில் முதல் பக்கம் அதிலும் முழு பக்கத்திற்கு கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம்! வருடந்தோறும் முட்டை விலை ரூ 2.24 பைசா மட்டுமே! ரூ 700 கட்டினால் வாரம் தோறும் 6 முட்டைகள் வீட்டிற்கு நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும்! ரூ1,400 கட்டினால், 12 முட்டைகள் டெலிவரி செய்யப்படும். ரூ 2,800 கட்டினால், வாரம்தோறும் 24 முட்டைகள் தரப்படும். பணம் கட்டி 15 வேலை நாட்கள் (அதாவது தோராயமாக 20 நாட்கள்) காத்திருக்க வேண்டும். பணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட ...