விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...

இன்றைய தினத்தந்தி , தினகரன் நாளிதழ்களில் முதல் பக்கம் அதிலும் முழு பக்கத்திற்கு கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம்! வருடந்தோறும் முட்டை விலை ரூ 2.24 பைசா மட்டுமே! ரூ 700 கட்டினால் வாரம் தோறும் 6 முட்டைகள் வீட்டிற்கு நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும்! ரூ1,400 கட்டினால், 12 முட்டைகள் டெலிவரி செய்யப்படும். ரூ 2,800 கட்டினால், வாரம்தோறும் 24 முட்டைகள் தரப்படும். பணம் கட்டி 15 வேலை நாட்கள் (அதாவது தோராயமாக 20 நாட்கள்) காத்திருக்க வேண்டும். பணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட ...

“எவ்வளவு பெரிய தடுப்புச்சுவரும் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்காது. உலகினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே -இப்பொழுது தாக்கும் கொரோனாவாகட்டும் அல்லது எதிர் காலங்களில் தோன்றும் பெருந்தொற்றாகட்டும்-  மக்களை பாதுகாக்கும்.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  G7  மாநாட்டில் கூறியிருக்கிறார். எல்லோரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஞானம்தான் அவரை இவ்வாறு பேசத்தூண்டியிருக்கிறது. அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட அடித்தளமாக அமைய வேண்டியது விஞ்ஞான மனோபாவம்  என்ற ஸைன்டிபிக் டெம்பர்   மட்டுமே. வெறும் மந்திர  தந்திர செயல்களால் அல்லது வெற்று கோஷங்களினால் பெருந்தொற்றை வெல்ல முடியாது என்பதை மோடி ...

செங்கல்பட்டில் உள்ள 909 கோடியில் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் பயோடெக் எனப்படும் தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக சும்மா போட்டு வைத்திருந்தது மத்திய அரசு. தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த தடுப்பூசி மையத்தில் மக்களின் அவசர தேவைக்காக உற்பத்தியை தொடங்கும் அனுமதி வேண்டும் என கேட்டால் பத்து நாட்களாக மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், இது நாள் வரை டெண்டர் போட்டு அழைத்த போதும் வராமல் சும்மா இருந்த தனியார் நிறுவனமான பாரத் ...

அத்தியாவசிய உணவுப் பொருள் பால்! ஆவின் பாலுக்கு தமிழ் நாட்டில் நல்ல மவுசு உள்ளது! ஆனால், அதில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அரசியல் தலையீடுகளும், அபார கொள்ளைகளும் நடக்கின்றன! மாடு வளர்த்து பால் தருபவனும் பலன் பெறுவதில்லை! விநியோகிப்பவனும் பலடைவதில்லை! இடைத்தரகர்கள், காண்டிராக்டர்கள் காட்டில் தான் மழை! எப்படி நடக்கின்றன..இந்த முறைகேடுகள்..! புரதச்சத்து அதிகம் கிடைக்கும் உணவுப்பொருள் பால்.பால் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடையே பேசுகிறார். உலகப் ...