இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...
உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…? விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்! சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை ...