நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு நாட்களாக உச்சகட்ட கொந்தளிப்பில் தகித்தன! அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த சினத்தால் அவைகள் முடங்கியதில் ஆளும்கட்சியினர் திகைத்தனர்! 1970 — களில் உலகையே உலுக்கிய அமெர்க்க அதிபர் நிக்சனின் “வாட்டர்கேட் ஊழலுக்கு, தற்போதைய “மோடிகேட் ஊழல்” சற்றும் சளைத்து அல்ல என சரித்திரம் தனது துயரை அழுத்தமாக உரைக்கிறது ! ஆளும் பொறுப்பில் இருப்போர்  எதிர்கட்சித் தலைவர்களையும்,பிற பிரமுகர்களையும்  முறையற்ற முறையில்  வேவு பார்ப்பதென்பது  “அநாகரிகமான குற்றம்” என நாகரிகமான சமூகம் கருதுகிறது ! அடுத்தவர் குளியலறையில் எட்டிப்பார்ப்பது ...

ஒட்டு கேட்பு, உளவு பார்ப்பு  விவகாரத்தில், சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களைக் கூட உளவுபார்க்கும் ஒரு கோழைத்தனமான அரசாக பாஜக இருந்துள்ளது என்பது தான் இதன் ஹைலைட்டாகும்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை என்ற உளவு மென்பொருளை பல்வேறு உலக நாடுகள் தீவிரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா அரசோ ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நீதித் துறையினர்,அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்  உட்பட 300 பேரை உளவு ...