”பாஜக மாபெரும் வெற்றி பெறும். அதையடுத்து பங்கு சந்தை தாறுமாறாக உயரவுள்ளது. ஆகவே, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என மோடியும், அமித்ஷாவும் அறிவித்த இரண்டே நாளில் சுமார் 30 லட்சம் கோடிகளை பங்கு சந்தையில் மக்கள் இழந்ததன் பின்னணியில் நடந்தது என்ன? ஆதாயம் அடைந்தவர்கள் யார்..? பங்கு சந்தை ஜூன் 3 ந்தேதி செயற்கையாக ஒரு ஏற்றம் கண்டது. தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4 அன்று மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது! இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் பணம் இழந்தது  குறித்து ராகுல்காந்தி ...

மாலத்தீவு பெரும் பேசுபடு பொருளாகி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளது நியாயமே. அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான கொந்தளிப்பு மன நிலை மாலத் தீவில் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை பார்க்க வேண்டும் – நீதிபதி ஹரிபரந்தாமன் கட்டுரை; மாலத் தீவுக்கு அருகில் இந்தியாவின் லட்சத்தீவு இருக்கிறது .லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, லட்சத் தீவின் அழகை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு ...

மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று  ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும்  ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...