குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற ஐந்து மாதக் கர்பிணியை கற்பழித்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற 11 குற்றவாளிகளை 15 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு! ஆனால், தமிழக அரசுக்கோ ஏன் 20-30 ஆண்டு சிறைவாசிகளைக் கூட விடுதலை செய்ய முடிவதில்லையே ஏன்? 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறையில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், அன்றைய மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில்! குஜராத் கலவரத்தின் போது பல அதிர்ச்சி தரும் ஈவு இரக்கமற்ற படு ...
போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்! ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது ...
31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு! சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு ...
தமிழ் நாட்டில் 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சிறையில் காலவரையின்றி வாடி வருகின்றனர்! இவர்கள் அனைவரும் 50 வயது முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள்! நீண்ட நெடும் காலமாக சமூகத்தையும், குடும்பத்தையும் பிரிந்து, உடல் குன்றி, உள்ளம் நொந்து சிறையில் உள்ளனர். கொரனா நெருக்கடி சிறைவாசிகளையும் பாதித்துள்ள இந்த தருணத்தில் அங்கு அதிக காலம் சிறையில் கழித்தவர்களை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழக பொதுச் செயலாளர் இரா.முத்தரசனும், திராவிடர் கழக தலைவர் ...