அதிகாலைத் தொடங்கி மாலை வரை கடின உழைப்பு! தேயிலை பறித்து, பறித்து மரத்து போன கைகள்! ரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டைப் பூச்சிகளின் தொல்லை!  ஓய்வற்ற உழைப்பு, அடிமாட்டுச் சம்பளம், இந்த எளிய மக்கள் இன்று அதிரடியாக வெளியேற்றப்படுவதா? காட்டைக் காப்பாற்றுவதாகச் சொல்வது உண்மையா? மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது தான் மாபெரும் தேயிலைத் தோட்டமான மாஞ்சோலை எஸ்டேட்டாகும். தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 1929-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி ‘பாம்பே பர்மா டிரேடிங் ...

அரசு போக்குவரத்தை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தி, அதிகாரத்திற்கு வந்துள்ள தற்போதைய திமுக அரசு, போக்குவரத்து கழகங்களை சீரழித்து வருகிறது. தொழிலாளர்கள் நலன்கள் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், தொழிலாளர்கள் மிகப் பெரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் ஏன்? அரசு போக்குவரத்து  கழகங்கள் என்பவை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யத் தான் உருவாக்கப்பட்டன! எந்த தனியார் பேருந்துகளும் செல்ல விரும்பாத தடங்களில் எல்லாம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் குக்கிராமங்கள் தொடங்கி, குறைந்த மக்கள் வாழ்கின்ற ...

ரயில்கள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பை முடக்கி, வெளிநாட்டு நிறுவனத்தை உள்ளே நுழைக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு! இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகச் சிறப்பாக இயங்கும் அரசு நிறுவனத்தை அயலார்க்கு தாரை வார்க்க முன்னோட்டமா? பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையின் இரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. நவீன வந்தே பாரத் பெட்டிகளை உருவாகிய இந்த பாரம்பரிய அரசு நிறுவனத்திற்குள் வெளிநாட்டு நிறுவனத்தை நுழைப்பதால் உருவாகும் பொருளாதார இழப்புகளை அலசுகிறது இந்தக் ...

இன்று உழைப்பாளர் தினத்தை கொண்டாட மே தினப் பூங்காவிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு இரண்டுகெட்டான் விதமாக உள்ளது! கூடுதல் வேலை நேர சட்டத்தை திரும்பப் பெற்றது மகிழ்ச்சி! ஆனால், இந்த சட்டம் தொழிலாளர் நலன் கருதி தான் கொண்டு வரப்பட்டது என மீண்டும் வலியுறுத்துகிறார்! அப்படியானால்…? ‘கூடுதல் வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக’ முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ”திமுக எப்போதுமே தொழிலாளர்களின் தோழன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதை திரும்பப் ...

மனிதாபிமானம் இல்லாமல் தொழிலாளர்களின் வேலை நேரத்தை இஷ்டப்படி முதலாளிகள் அதிகப்படுத்திக் கொள்ள பாஜக அரசு படிப்படியாக சட்டங்களை திருத்தி, காய் நகர்த்தி வந்தது. அதைத் தான் தமிழக அரசுக்கு நிர்பந்தித்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு சட்டம் தந்த பாதுகாப்புகள் என்னென்ன? அதை தகர்க்க நடக்கும் பின்னணி என்ன? உலகில் மேற்கத்திய நாடுகள் தொழிலாளர்களின் உழைப்பு நேரத்தை குறைத்து வருகிறார்கள்! அளவாக வேலை வாங்கப்படும் தொழிலாளர்கள் உடல், மன ஆரோக்கியத்துடன் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்! ஆனால், இங்கோ எவரும் எதிர்பார்த்திராத வகையில் 12 ஏப்ரல் 2023 அன்று தமிழ்நாடு சட்டசபையில் ...

இந்தியாவில் பாஜக அல்லாத வேறெந்த மாநிலமும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தம் 65ஏ –வை திமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்குதல், தனியார் மயம் உள்ளிட்ட மோசமான அம்சங்களை எதிர்கொள்ள வேண்டும்! மத்திய அரசின் தொழிலாளர்  விரோத சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தொழிற்சாலை நிர்வாகங்களின்  சுரண்டலுக்கு தோதாகச் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் போராட்டங்கள் நடத்திக் ...

”விலைவாசி உயர்வு விழி பிதுங்குகிறது! முதலாளிகளை வாழ வைப்பதில் தான் மோடி அரசின் முழுக் கவனமும் உள்ளது! போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. தொழிற்சங்கங்கள் தான் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும்” – ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌரின் பேட்டி! நூற்றாண்டைக் கடந்த, இந்தியாவின் பழம் பெரும் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் (அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்),  அகில இந்திய மாநாடு கடந்த வாரம்  கேரளாவின் ஆலப்புழாவில் நடந்தது. ”இந்தியா தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைய வேண்டும்;  – அரசாங்கத்தின் ...

பத்தாண்டுகள் பாடுபட்டு வேலை செய்தாலும், பணி நிரதரப்படுத்தாமல் தொழிலாளர்களை அத்துக் கூலிகளாகவே  வைத்திருப்போம் என்பதாக  தமிழக அரசு ஆணை  என்று வெளியிட்டுள்ளது. காண்டிராக்ட் முறையை ஊக்குவித்து கமிஷன் பெறும் அணுகுமுறையானது  உள்ளாட்சித் துறையை ஊழல்மயமாக்கி வருகிறது! உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணி செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பெரும்பாலும் பட்டியலின மக்கள்தான் அந்த வேலையைச் செய்கின்றனர். இவர்களின்  வேலைவாய்ப்பை ஒழித்துக் கட்டுவது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது.  கல்வியின்மை, வாழ்நிலை, சாதியம் போன்ற காரணிகளால் தூய்மைப் பணியாளர்களை சங்க ரீதியாக திரட்டுவதில் பாரபட்சம் நிலவுகிறது. எனவே அவர்களுடைய ...

உணவை எடுத்துக் கொண்டு பறக்கிறார்கள்! பதட்டத்துடன் ஓடி டெலிவரி செய்கிறார்கள்! அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள்? இயற்கை உபாதைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள்? தினமும் 12 மணி நேரம் சாலையிலேயே வாழ்க்கை கழிகிறது! ஸ்விக்கி, ஓலோ, உபர், ஜொமட்டோ.. எல்லாமே உழைப்பு சுரண்டாலாக உள்ளது! இப்படி ஓடி,ஓடி உழைப்பவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்காக உழைத்து, ஆறேழு வருடங்களில் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள்! இந்திய ஒன்றிய அரசு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா சட்டங்களில் இருந்தும் விதிவிலக்கு அளித்திருக்கிறது, பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி, தொழிலாளர் ...

தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பாஜக ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு ராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்! பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சசல் பிரதேசம் ,தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது. காரணம், ...