பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணப்படுவதாக பாஜக அரசு பொய்யான புள்ளி விபரங்களைத் தந்து கொண்டுள்ளது! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! உண்மையில், அதிகமாக கடன்பட்டு, இந்தியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது! இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 13, 2022 அன்று, ”அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதைத் தடுப்பது என்ன?” என்று தொழில்துறையினரை கேள்வி கேட்டார்.  இது, முதலீடுகளை கவர்வதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்! முதலீட்டாளர்களுக்கு ...

இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதத்திற்குள் போவதற்கு முன்பு நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இதில் வேண்டும், வேண்டாம் என்ற இரு தரப்பு அரசியல்வாதிகளும் ஒரே நோக்கம் கொண்டவர்களே! ”மக்களின் தேவை அறித்து ஒன்றை இலவசமாக தருவது என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் எடுக்கும் முடிவு இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என வெங்கய்யா நாயுடு தொடங்கி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரைக்கும் பல அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்! இன்றைக்குள்ள நமது மத்திய மாநில அரசுகள் இரண்டுமே மக்கள் நல அரசுகளல்ல. இவை ...

2 ஜியில் நடந்தது என்ன? 5 ஜியில் நடக்காமல் போனது என்ன? 2 ஜியைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த 5 ஜி மிகக் குறைவான விலைக்கே ஏலம் போயுள்ளது. 2 ஜியில் 1,76,000 கோடி நஷ்டம் என்பது உண்மையா?  5 ஜியின் மொத்த ஏலத் தொகை 1,53,173 கோடி  என்றால், 5 ஜி ஏலத்தில் எத்தனை லட்சம் கோடி இழப்பு? 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டது.  ஆகவே ஐந்து லட்சம் கோடிக்கு மேல் ...

நடுத்தர வர்க்க மாதாந்திர சம்பளக்காரர்களுக்கு கிடைக்கும் சம்பளமே போதுமானதில்லை. அதே சமயம், ஆண்டுக்காண்டு கணிசமான தொகை வருமான வரிக்கு போய்விடுகிறது. சட்ட பூர்வமாக வருமான வரியில் இருந்து விலக்கு பெற செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? வருமான வரி கட்டுபவர்கள் மார்ச் மாதம் வந்தால் எப்படி வரி சேமிக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலானோர் சொல்லும் யோசனை இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் போதும். வரிப் பணத்தை சேமிக்கலாம் என்பது தான்! வரி சேமிப்பிற்கு என்று சில திட்டங்கள் ...

உலக பணக்காரர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டு வருகிறார் அதானி! இந்த வகையில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமாக கால்பரப்பி வருகிறது அதானி குழுமம். கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆக்டோபஸ் கரங்களில் தமிழகம் சிறிது சிறிதாக செல்வது குறித்த ஒரு பார்வை! டெலிகாம் துறையில் புதிதாக நுழைந்த அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கிவிட்டது. தமிழ்நாடு, குஜராத், மும்பை, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை அதானி வாங்கியுள்ளது. ஏற்கனவே பி.எஸ்.என்.எல் அழிவின் பின்னணியில் அம்பானியின் ...

வங்கி வைப்பு தொகைக்கு அதிகபட்சம் 5.5 % வட்டி வழங்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்கள் 12% வருமானம் தருகிறது. சில திட்டங்கள் 12% க்கும் அதிகமாக வருமானம் வழங்குகிறது. மியூச்சுவல் பண்டில் என்னென்ன திட்டங்கள் உள்ளன! இது பாதுகாப்பானதா? நீண்ட கால திட்டத்தில் நாம் இருந்தால் 12% வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் வங்கி வைப்பு நிதியில் கொஞ்சம் பணமும், மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் பணமும் முதலீடு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் Large Cap Fund, Mid Cap Fund, Small Cap ...

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பாதுகாப்பானவையா? இவை எப்படி செயல்படுகின்றன? அதை தெரிந்து கொள்வது எப்படி? ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தை, கடன் சந்தை மட்டும் இல்லாமல் தங்கத்திலும்  முதலீடு செய்யும் திட்டங்களையும் வெளியிடுகிறது. அன்றைய தங்க விலைக்கு ஏற்ப உங்கள் முதலீடு உயரும், குறையும். ஆனால்,  நாம் முதலீடு செய்யும் தொகைக்குத் தங்கமாக தரமாட்டார்கள்.  பணமாகத்தான் தருவார்கள். அந்த தொகையைக் கொண்டு நாம் வெளியே தங்கம் வாங்கிக் கொள்ளலாம். ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் ...

சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேதாரமாகிவிடும். தவறான இடத்தில் சேமிக்க கொடுப்பது ஆதாரத்தையே அழித்துவிடும்! சேமிக்கும் பணத்தை என்னென்ன வழிமுறைகளில் முதலீடு செய்யலாம்..? ரிஸ்க் எடுக்க விருப்பமா? ரிலாக்ஸ் சேமிப்பு விருப்பமா? கடந்த 5 கட்டுரைகளில் அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கிய சேமிப்பு – முதலீடு – பென்சன் திட்டங்களைப் பார்த்தோம். இவை எல்லாம் பாதுகாப்பானவை. குறிப்பிட்டுள்ள வட்டி கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். என்றைக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக இருக்காது. எந்த அளவு ஒரு முதலீட்டில் ரிஸ்க் அதிகம் உள்ளதோ, அந்த ...

விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள்  எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே  இருக்கும். 60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே ...

எப்படி சேமிப்பது? எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்து வளர்த்து எடுப்பது? என்பது தெரியாத காரணத்தாலேயே பல துன்பவியல் சம்பவங்கள்,தற்கொலைகள் நிகழ்கின்றன! உண்மையில் சேமிப்பு என்பதை அறியாமலே வாழ் நாள் முழுக்க கடனாளியாக வாழ்ந்து மடிபவர்களும் உண்டு..! நாம் சிக்கனம் செய்து சேமித்து வைத்திருக்கும்  பணத்தை என்ன செய்யலாம் என்றால், சீட்டுப் போடுங்கள் என்று நண்பர்கள், உறவினர்கள்  சொல்வார்கள். நாமும் நம் பகுதியில் சீட்டு பிடிப்பவர்களிடம் கட்ட தொடங்குவோம். இன்று நம் மக்களின் முக்கிய முதலீடு சீட்டுக் கட்டுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறையாவது சீட்டுக் ...