சந்திர சூட் அளவுக்கு சறுக்கியவரல்ல, தலைமை சஞ்சீவ் கண்ணா. சில முக்கியமான விவகாரங்களில் அதிகார மையங்களிடம் அடிபணியாமல் தீர்ப்புகளை வழங்கினார். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பர். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவராக வலம் வந்தார்; நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்புகள் குறித்து அலசுகிறார் ஹரிபரந்தாமன்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா அவர்கள் மே- 13,.2025 அன்று ஓய்வு பெற்றார். இவர் ஆறு மாத காலமே இந்த உயர் பொறுப்பில் இருந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவரது நியமனம் ...
தமிழகத்தை உலுக்கிய இந்த பாலியல் கொடூர வழக்கின் மிக முக்கிய குற்றவாளிகளை காவல் துறையும் சரி, சிபிஐயும் சரி நெருங்கவே இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இந்த வி.ஐ.பிக்கள் யார்? யார்? இவர்கள் எப்படி தப்பிக்க வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருப்பது யார்..? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு நஷ்ட ஈடு அறிவித்திருப்பதும் தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது..! ஆகவே, இந்த ...
ஏரியை ஏப்பம் விட துடிக்கும் கூட்டத்திற்கு துணை போகும் அரசு அதிகாரிகள்…! ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்களை கொலை செய்து, ஏரிக்குள் கட்டப்பட்ட கோவிலுக்கு திருவிழாவாம்..! இதை அனுமதித்திருப்பது திமுக ஆட்சி? பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் இயற்கை நீராதாரத்தை அழிக்கும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது…? இது ஏதோ உ.பியில் நடந்ததல்ல, தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில்! தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நீர்பிடிப்பு பகுதிகளான ஏரி,குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதற்கு அரசே பட்டா தந்து ஆதரிப்பதும் தொடர்கதையாகிவிட்டன! தமிழகத்திலுள்ள முதலைப்பட்டி என்ற சிற்றூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை ...
கிரானைட் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை ஆட்சியாளர்கள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்க காரணம் என்ன..? பி.ஆர்.பி குவாரிகளை சகாயம் மூடி இருக்காவிட்டால், மதுரை, தேனீ, திண்டுக்கல் மாவட்ட மலைகள் முழுவதும் எப்போதோ விழுங்கப்பட்டு இருக்கும். சகாயத்தின் எதிரிகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகி விட்டார்களா? மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, கிரானைட் குவாரி கொள்ளையர்கள் அழித்து சூறையாடிய கண்மாய், குளங்கள், ஓடைகள், பாசன கால்வாய்கள், விவசாய நிலங்கள், ஊர்கள் குறித்த முழு விவரங்களையும் நேரடியாக களம் கண்டு குறிப்பெடுத்தவர் சகாயம். அதை தமிழக ...
ஏப்ரல் 22 அன்று பெஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளிலும் பற்றிக் கொண்ட பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது..! ஒரு பெரும் யுத்தத்தை நிர்பந்தித்து தேச பக்த வெறியை உசுப்பிவிட நினைக்கும் போக்கு தெரிகிறதே…? சம்பவம் நடந்த இடத்திற்கு இராணுவத்தினரும், மத்திய பாதுகாப்பு படை (சி ஆர் பி எஃப்) மற்றும் காஷ்மீர் பிரதேச காவல்துறை வருமுன்னரே ஊடகங்கள் இதை பாக்கித்தானின் கைவரிசை என குறிப்பிட்டனர். இந்திய அரசும் ...
“பத்திரிகைச் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்பது மட்டுமல்ல, ஜனநாயகமே அதுதான்.” -வால்டர் குரோங்கைட் நேர்மையான, நம்பகமான ஊடகவியல் பணிக்கான ஒரு முன்னுதாரணமாக உலக அளவில் கொண்டாடப்படுபவர் வால்டர் குரோங்கைட் (1916–2009). அவருடைய இந்தக் கருத்தும் ஊடகவியலாளர்களால், ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றைய வளர்ச்சியில் பத்திரிகை என்பது அனைத்து ஊடகங்களுக்குமான அடையாளம் தான். ஆகவே தான், உலகப் பத்திரிகைச் சுதந்திர நாளுக்கான (மே 3) ஓவியச் சித்தரிப்புகள் அனைத்தும் பேனா, ஒலிவாங்கி, கைப்பதிவுக் கருவி, கைப்பேசி, கணினித் தட்டச்சுப் பலகை உள்ளிட்ட அடையாளங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ...
விழிஞ்சம் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என 10 ஆண்டுகளாக போராடிய மீனவர்களின் எதிர்ப்பை மீறி, இன்றைய தினம் இத் துறைமுகம் பணி முழுமையடைந்து பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு அலசல்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. மீனவ மக்களின் கடுமையான தொடர் போராட்டங்களால் அவ்வப்போது பணி நிறுத்தப்பட்ட வகையில் 2023-ல் முடிந்திருக்க ...
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சவால் மிக்க ஒன்றாகும். சாதிவாரிக் கணக்கெடுப்பை சரியாகவும், நேர்மையாகவும் சாத்தியப்படுத்துவதிலே நிறைய சவால்கள் புதைந்துள்ளன. அது எடுத்த பிறகு ஏற்படும் சர்ச்சைகள் என்பது தனி ரகம்! அதே சமயம் மத்திய பாஜக அரசு சில அரசியல் கணக்கை வைத்தே இந்த காய் நகர்த்தலை செய்கிறது; சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது…? என்ற குரல்கள் அரசியல் தளத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ”பீகார், தெலுங்கானாவில் நடத்திவிட்டார்களே.. தமிழ் நாட்டில் நடத்த என்ன தடை? ஏன் ஸ்டாலின் தட்டிக் கழிக்கிறார்..?” எனக் கேட்கப்பட்டது. ”மத்திய ...
கேட்கப்பட்டவை, எதிர்பார்க்கப்பட்டவை எதுவுமே முதல்வரின் அறிவிப்பில் இல்லை! பறிக்கப்பட்வை சில திருப்பியளிக்கப்பட்டுள்ளன. என்னென்ன அத்தியாவசியமானவை என்ற புரிதலே அரசின் தலைமைக்கு இல்லாமல் இருப்பது தான் முதல்வரின் அறிவுப்பு சொல்லும் செய்தியாகும். இதோ ஒரு நினைவூட்டல்; தமிழ்நாடு அரசு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது வகையான அறிவிப்புகளை முதல்வர் (28/04/2025) வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளைப் பற்றி பெருமை கொள்ள எதுவுமே இல்லை என்பதே யதார்த்தம். ஆமாம், அரசு ஊழியர்களுக்குப் புதிதாக எதுவும் அறிவிக்கவில்லை. ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்து பணப்பலன் ...