ஒவ்வொரு மாதமும் அறத்திற்கான சந்தா கேட்பதை சமீப காலமாக தவிர்த்து வருகிறேன்! பொது நலன் சார்ந்த பார்வையுடன், சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து வாசகர்கள் தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்திருந்தேன்! ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்! கமிட்மெண்டான வாசகர்கள் மிகச் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா ...
அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம் ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர். ”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். ”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ...
அறம் மூன்றாம் ஆண்டு தொடக்கமும், நூல் வெளியீடும் இனிதே நிறைவேறியது! சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காந்தியவாதிகள் வாசகர்கள் என அன்பர்கள் கலந்து கொண்டனர். அதில் அறத்தின் சமூக தேவை குறித்த பேச்சுக்கள் முக்கியத்துவம் பெற்றன! 2020 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அறம் இணைய இதழ் தொடங்கப்பட்டது. சமகால மக்கள் பிரச்சனைகளை அலசி, பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசி அந்த பிரச்சனையை எப்படி அணுக வேண்டும், அதன் உண்மைத் தன்மை என்ன என்று ஒவ்வொரு கட்டுரையும் பேசும். தினமும் அறத்தில் கட்டுரை இப்படித்தான் ...
வணக்கம் நண்பர்களே, அறம் சிறு தீப்பொறி தான்! படிப்போர் சிந்தையிலும் அந்த தீப்பொறி பற்றிக் கொள்வதால் அதன் அளவுக்கு அநீதிகளை சுட்டெரிக்கவே செய்கிறது. அதனால், கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் அரங்கில் அதிர்வுகளையும், சமூக தளத்தில் சலசலப்புகளையும் தன் போக்கில் ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நமது அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் அடிமைத் தனமும், பாசாங்குத் தனமும் மேலோங்கி இருக்கிறது! இந்த சமூகம் தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டது. அதுவே, அரசியலிலும் பிரதிபலிக்கிறது. அதைத் தான் அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும் ...
”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ...