அரசியல் ஈடுபாடு என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆழ் மன உந்துதலில் இருந்து வந்தால்..அப்படிப்பட்டவர் அதை ஈடேற்றுவதற்கான அதிகாரத்தை பெறுவதற்கு தனக்கான சகாக்களை சரியாக அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்வார்! அப்படி இல்லை என்றால், அவர் அன்னியர்களை நம்பி தன்னையே அழிவுக்கு உள்ளாக்கிக் கொள்வார்! சமீபகாலமாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்ற புதிய தொழில் ஒன்று உருவாகி அரசியல் தலைவர்களை ஆட்டுவித்து வருகிறது! 2014 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் என்பவர், அன்றைய பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் மோடியை பிரமோட் ...
கமலஹாசனின் உண்மையான பலம் தெரிந்துவிட்டது. அவரைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் டெபாசிட் பறி கொடுத்துள்ளனர்! நிற்க முடிந்த தொகுதிகளே 141 தான்! அதிலும் பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்கள் கிடைக்காமல் வெளியூர் ஆட்களே நின்றனர். அந்தளவுக்கு தான் கட்சியின் கட்டுமான பலம் இருந்தது. மீதியுள்ள தொகுதிகளை கல்வி சுரண்டலுக்கு பேர் போன எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் பச்சைமுத்து மகனுக்கும், சாதி சந்தர்ப்பவாத அரசியல்வாதியான சரத்குமாருக்கும், போக்கிடம் தெரியாமல் புலம்பிக் கிடந்த கே.எம்.செரிப்பிற்கும் தந்தார். ஏழு தொகுதிகளுக்கு நிற்க ஆளே கிடைக்கவில்லை! இப்படிப்பட்ட ...
ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை! தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்! வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்! நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்! ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் ...
‘அப்பப்பா..என்ன மாதிரி புனிதமானவருய்யா கமல்…’ அப்படின்னு நாம் புளகாங்கிதமடைவோம்னு அவர் நினைக்கிறாரு போல! ”அரசியல் எனக்கு தொழில் இல்லை. என் தொழில் சினிமா. நான் வெற்றி பெற்றாலும் நடிக்கச் செல்வேன்.அந்த சம்பாத்தியத்தில் வாழ்வேன்’’ என்கிறார் கமல். இதன் மூலம் அரசியலை தொழிலாக எடுத்துக் கொண்டு இயங்க முடியாத அவரது மனநிலை நமக்கு நன்றாகவே தெரிய வருகிறது! முதலாவதாக அரசியலைத் தொழிலாகக் கொள்வதை இழிவாக கருதும் மனநிலையில் இருந்து அவர் விடுபட வேண்டும்! முதலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனித பிம்பத்தில் இருந்து கமலஹாசன் ...
பாஜகவின் திருவிளையாடல்களால் தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருந்து பச்சமுத்துவின் ஐ.ஜே.கே வெளியேறியது! அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது. இரண்டும் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் பாஜகவின் மறைமுகக் கூட்டாளியான மக்கள் நீதி மையத்தை நாடியுள்ளது. சரத்குமார் முன்னதாக சசிகலாவை சந்தித்து ஆலோசனை பெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, அதிமுக அணிக்குள் சசிகலாவை கொண்டுவரமுடியாத பட்சத்தில் இந்த கூட்டணிக்குள் செல்ல சசிகலாவை பாஜக அறிவுறுத்தி இருக்கக் கூடும்! தவறான வழியில் சொத்து ...