நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம் வலிமை தரும் பழம்.  நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை; இந்தப் பழம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி இவைகளில் இன்னும் இடம் பெறுவதை காணலாம். ”சுட்டப் பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?” என அந்தக் குமரன் அவ்வைப் பாட்டியை அலை கழித்த புராண ...

மஞ்சள் என்றால், மங்களம் என்பது தமிழர் மரபு .! மஞ்சளின் மகிமைகள் சொல்லில் அடங்காது! நம் பாரம்பரிய ஆரோக்கிய வாழ்வில் மஞ்சளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடல் பாதுகாப்பில் மஞ்சளுக்கு ஈடில்லை! ஆயிரக்கணக்கான நவீன விஞ்ஞான ஆய்வுகள் மஞ்சளின் பெருமைகளை பட்டியலிட்டுள்ளன..! மஞ்சள் இல்லாமல் எந்த சுப நிகழ்வும் தமிழர் வாழ்வில் இல்லை. எந்த ஒரு காரியம் துவங்கும் போதும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குவதற்கு பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த ஒரு நுட்பமான அர்த்தம் பொதிந்துள்ளது. ஒரு கோப்பை நீரை கொதிக்க வைத்து, ...

அரச மரம் என்பது நம் மரபில் வழிபாட்டுடன் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது. இதனை வழிபடுவதன் பின்னணியில் ஒரு ஆரோக்கிய அணுகுமுறை உள்ளது. ஆரோக்கியத்தை தருவதில் அரசனாக இருப்பதால் இது அரச மரம் என்றழைக்கப்படுகிறது. ‘அரசமரம் இருக்கும் இடங்களில் ஆரோக்கியம் உத்திரவாதம்’ என ஏன் சொல்லப்படுகிறது..? பொதுவாக மரங்கள் அறிவியல் ரீதியாக பகலில் பிராண வாயுவையும், இரவில் கரிமில வாயுவையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால், அரச மரம் பகலிலும், இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது! அரச மரம் தூய்மையான ஆக்ஸிஜனை வெளி விடுவதால் நம் ...

இதை ஆலமரம்  என்பதை விட ALL மரம்,  எனலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு ஆல் ரவுண்டரானது ஆலமரம். இது, நம் நாட்டின் தேசிய மரமாக வைக்கப்பட்டதற்கு ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறது. உடலுக்கான ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உள்ளத்தின் நலனையும் தரும் ஆலமரத்தின் சிறப்புகள் குறித்து ஒரு அலசல்: இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது . அதுவும்  ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையாக நூற்றாண்டுகள் பாரம்பரிய தொடர்ச்சி கொண்டவை. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’  என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் ...

பற் பல மதங்களிலும் தாமரை ஒரு தெய்வீக மலராக அறியப்படுகிறது. இது மலர் மாத்திரமல்ல, ஒரு மூலிகையுமாகும் இதன் வேர், தண்டு, இலை, விதை அனைத்துமே பயனுள்ளது. தாமரை  சேற்றில் இருந்தாலும்  மாசுபடுவதில்லை. இதை பலவாறாக சமைக்கலாம். தாமரைப்பூ தேனீர் மருத்துவ குணம் கொண்டதாகும்; நமது நாட்டைப் பொறுத்த வரை தாமரை ஒரு மூலிகை என்பதைவிட ஒரு மங்கலப் பொருளாகவே மதிக்கப்படுகிறதேயன்றி, அது ஒரு மூலிகை என்பதே பலருக்கு தெரியாது. இன்று பலருக்கும் பிளட் பிரஷர் எனப்படும் ரத்த கொதிப்பு பிரச்சினை உள்ளது. இரத்தக் ...

அத்தி மரம் ஆன்மீகச் சிறப்பு பெற்றது. அத்தி மரத்தின் காய்,பழம், பட்டை போன்ற அனைத்தும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி மரத்தின் பெருமைகளை பறவைகள் கூட நன்கு அறிந்திருக்கின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க இயலாத ஒன்று அத்திப் பழமாகும்! நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த  கதைப் புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும் ‘1001 இரவுகள்’ என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன முக்கியமானதாகும். அவற்றில் வரும் கதை மாந்தர்கள் அத்திப் பழத்தை மிகவும் ருசித்து  சாப்பிடுவதாக  கதைகளில் வரும். ...

நோய்கள் தாக்க முடியாத கவசமே ஆடா தொடை! பொக்கிஷமான இந்த மூலிகை வீதி ஓரங்களில் தானாக முளைத்துக் கிடக்கிறது. இது இருதயம், இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் சளியாலும், வாய்வினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் மூலிகையாகும். இதன் பயன்களை பார்ப்போமா? “பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை தணிக்காத கோபதர்ற் றாகந் – தணிக்காமை யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால் மேலும் பிணிகளுறுமே” – தேரையர் நோய்கள் உடலில் உண்டாவதற்கான  காரணங்களை தேரையர் இந்தப் பாடல் விவரிக்கிறார். அதிக கோபம் மிக்க தாகம் மாறுபட்ட ...

சுபமங்கள காரியம் தொடங்கி சுகமான தாம்பத்தியம் வரை தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது, வெற்றிலை! இதன் சமூக வரலாறு சுவாரசியமானது. குரல் வளத்தைக் கொடுக்கும். ஜீரணத்திற்கு உதவும் என்பது மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தில் வியக்கதக்க வகையில் பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுகிறது; நம் முன்னோர்கள் ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படையாக வெற்றிலையை உட்கொண்டனர். சாப்பிட்ட பிறகு வெற்றிலை தரிப்பது சம்பிரதாயமாக மட்டுமல்ல, நோயற்ற வாழ்வுக்கான உத்திரவாதமாக பார்க்கப்பட்டது. வாய்துர் நாற்றத்தை தவிர்க்கும். பற்களை பாதுகாக்கும், நெஞ்சில் சளி சேராமல் காக்கும்.. போன்ற பல நோக்கங்கள் இதில் ...

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். பியூட்டி பார்லர் போகாமலே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் இருந்து தாய்ப் பால் சுரப்பு, பித்த வெடிப்பை சரி செய்தல்.. என ஏகப்பட்ட, வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவது எளிது, பலன்களோ பெரிது; வித்தியாசமான இதன் பேரைக் கேட்டதும், ‘இது அரிசி போன்று இருக்குமோ…’ என்று நினைக்க வேண்டாம்.  இது ஒரு மூலிகையே..! இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என்ற பெயரும் உண்டு. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை ...

தும்பை எனும் தொல்சிறப்பு  மூலிகை ! – 2 தெம்பைத் தருவதாம் தும்பை! அதனால் தான் போருக்குச் செல்லும் மன்னர்கள் தும்பைப் பூ மாலைகளை அணிந்தனர். வெண்மைக்கும், மென்மைக்கும் உதாரணமாகத் திகழ்வது தும்பை பூ! கண்ணுக்கும் மருந்து, காதுக்கும் மருந்து, புண்ணுக்கும் மருந்து! கோடை தாகத்திற்கு விருந்து! மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! சென்ற பகுதியில் தமிழர்களின் மரபில் ஊறிய சித்த மருத்துவத்தின் அசைக்க முடியாத தத்துவங்களைப் பார்த்தோம். இனி தொடர்ந்து வாரம் ஒரு மூலிகை என  நம்மைச் சுற்றி விளைந்து கிடக்கும் ...