அறம் ஊடக ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள். தங்கள் இணைய ஊடகத்தில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் தாளாளரான என்னைப் பற்றிய நீண்ட அவதூறு கட்டுரையை நண்பர்கள் என் பார்வைக்கு அனுப்பியுள்ளார்கள். ‘இறைநேசன்’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள குற்றசாட்டுகளை முற்றிலும் மறுப்பதுடன் உண்மையான விவரங்களை சுருக்கமாக அளிக்க விரும்புகிறேன். 1975-ஆம் ஆண்டு அரசாணை எண்.18 மற்றும் அரசாணை எண்.479 நன்மங்கலம் வனபகுதியில் 40 ஏக்கர் வழங்க தமிழக அரசால் ஆணையிடபட்டு, 6 ஜனவரி 1976 – ஆம் ஆண்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் அறக்கட்டளை பொதுச்செயலர் ...
ஸ்ரீ வைகுண்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவனை சகித்துக் கொள்ள முடியாமல் அரிவாளால் வெட்டி சிதைத்துள்ளனர், சாதி ஆதிக்க சக்திகள்! நாங்குநேரி சம்பவத்திற்கு பிறகு நடக்கும் கணக்கற்ற சாதிவெறி சம்பவங்களில் இதுவும் ஒன்று..! கவனம் பெற முடியாத பல நூறு சாதி அநீதிகளுக்கு என்ன தான் தீர்வு..? தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ்-1 மாணவன் பள்ளிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் பைக்கில் பின் தொடர்ந்து வந்து பேருந்தை வழி மறித்து நிறுத்தி, அதிரடியாக பேருந்தில் ...
முஸ்லீம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு நிலம் தந்து, ஆசிரியர்கள் ஊதியமும், பல உதவித் தொகைகளையும் வழங்குகிறது. இவ்வளவையும் ஒரு தனி நபர் தன் சொந்த ஆதாயத்திற்கானதாக மாற்றி, அடித்தள ஏழை மாணவர்களிடம் ஈவு இரக்கமின்றி வசூல் வேட்டை நடத்தி அதிகார ஆட்டம் போடுவது எப்படி? 1974ம் ஆண்டு திருப்பூர் முகைதீன், கே.எஸ். அப்துல்வகாப் ஜானி (Ex MLC) எம்.ஏ. அப்துல் லத்தீஃப் MLA, ஏ. கே. ரிஃபாய் Ex M.P, எம். செய்யது முஹம்மது,திண்டுக்கல் நானா மூனா கனி, சிலார் மைதீன், ...
ஈராயிரம் ஆண்டு மொழி வரலாற்றில் சமஸ்கிருதமோ, பிராகிருதமோ என்றுமே தமிழ் மக்களால் ஏற்கபட்டதில்லை. மன்னர் ஆட்சி காலங்கள் பலவற்றில் கல்வி மொழியாக சமஸ்கிருதமே கோலோச்சியது. தாய் மொழியாம் தமிழ் மொழிக் கல்வியே கூட இங்கு இரு நூற்றாண்டுக்கு முன்பு தான் எளிய தமிழ் மக்களுக்கு சாத்தியமானது! முழு விபரம்; ”தமிழகத்தின் இரு மொழிக் கொள்கைக்கு 2000 வருட வரலாறு உள்ளது” என எந்தச் சான்றும், ஆவணங்களுமின்றி சிலர் கதையளக்கிறார்கள்..! தமிழ்நாட்டு மக்கள் வரலாறு நெடுகிலும் ஒரே மொழியைத் தான் ஏற்று வாழ்ந்துள்ளனர். இரு மொழி ...
‘ஒரே நாடு ஒரே கல்வி ‘என்ற கோட்பாட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் பாஜக அரசின் அனைத்து அபத்தமான திட்டங்களையும் ஒன்றுவிடாது அமல்படுத்துவதோடு, தமிழக பள்ளிக் கல்வியின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசிடம் தாரை வார்த்துவிட்டு, தற்போது இந்தியை மட்டும் எதிர்ப்பதாக வீரம் காட்டுவதா? முழு விபரங்கள்; ‘தேசியக் கல்விக் கொள்கையை நிர்பந்தித்து ஒன்றிய அரசு கல்வி நிதி ரூபாய் 2401 கோடியை பள்ளிக் கல்வி துறைக்கு தர மறுக்கிறது. மும் மொழிக் கொள்கையை அமல்படுத்தச் சொல்வதால் இந்த நிதி மறுக்கப்படுகிறது..’ என்ற விவகாரம் தற்போது ...
ஆளுநரின் அதிகார ஆட்டத்தால் ஆறு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி அல்லாடுகின்றன. தற்போது UGC அறிவித்துள்ள புதிய விதிகள், நமது உயர்கல்வி கட்டமைப்பை பின்னோக்கித் தள்ளுபவை. கூட்டாட்சித் தத்துவத்தை குலைப்பவை. பல்கலைக் கழகங்களை சிதைப்பவை. எளியோருக்கு கல்வியை மறுக்கும் மனுதர்ம நோக்கம் கொண்டவை; புதிய பல்கலைக்கழக மானியக்குழு (UGC) விதிகளின் படி, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் ...
பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் பஜனை மடங்களாக்கவும், பணம் ஈட்டும் வியாபார நிறுவனங்களாக்கவுமான திட்டத்தின் ஒரு பகுதியே UGC வரைவு அறிக்கையாகும். இது நம் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுத்துச் சென்று விடும். இதில் சொல்லப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகிறது; வரலாறு நெடுகவே கல்வியை முற்றிலும் தங்கள் பிடியில் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில் இப்போது பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டிருக்கும் புதிய வரைவு ...
அரசு பள்ளிகள் மீது இந்தக் கல்விக் கொள்ளையர்களுக்கு என்ன தீடீர் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது…! இதற்கான உள் நோக்கங்கள் என்ன..? அந்தப் படுபாதக நோக்கங்களுக்கு அரசாங்கம் துணை போவதா? அரசுப் பள்ளிக் கட்டமைப்புகளை தனியார்கள் படிப்படியாக ஆக்கிரமிக்க அரசே திட்டம் போடுவதா..? தனியார் பள்ளிகளுக்கான பல சங்கங்கள் ஒன்று சேர்ந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் சங்கத் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உள்பட கல்வித் துறையில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த தனியார் பள்ளிகள் ...
ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பல ஆண்டுகளாக தன் கைவரிசையை காட்டி வந்துள்ளார் என்றால், அங்கு அவருக்கு தோதாக இருந்தவர்களை ஏன் தூக்க மறுக்கிறார்கள்? ஞானசேகரனுக்கு பல்கலையின் உள்ளேயும் லோக்கல் காவல்துறையிலும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை; அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தை பொறுத்த வரை ஊடகங்களுக்கு அது கொஞ்ச நாளைக்கு பரபரப்புக்கான செய்தி! அரசியல் கட்சிகளுக்கோ தங்கள் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க கிடைத்த வாய்ப்பு. இதனால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை அறுவடை செய்வது ...
இன்றைய ஒட்டு மொத்தக் கல்வித் துறையும் மாநில அரசிடமிருந்து மத்திய அரசால் கபளீகரம் ஆகிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கத்தால் கல்வி சனாதனமயமாக்கப்பட்டும் வருகிறது. சுய சிந்தனையற்ற ஆள்வோருக்கான அடிமைகளை உற்பத்தி செய்து தந்து கொண்டிருக்கும் கல்வி குறித்த ஒரு அலசல்; இன்றைய கல்விச் சூழல் மீது தேசிய கல்விக் கொள்கை பெரும் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இத்தாக்குதலை எதிர் கொள்ள இயலாமல் நம் கல்விச் சமூகமும், பொதுச் சமூகமும் திணறுகிறது. கல்வியின் மீதான தாக்குதல்கள்: NEP 2020 எனப்படும் தேசியக் கல்வி கொள்கை கல்வி மீது நிகழ்த்தும் ...