சினிமா – நேற்று இன்று நாளை-1 90 வருடப் பயணத்தில் தமிழ்ச் சினிமா கடந்து வந்துள்ள பாதை சுவாரசியமானது! முதல் இருபதாண்டுகள் புராண, இதிகாசங்களிலேயே மூழ்கி திளைத்த நிலையிலும் கூட சமூக மாற்றத்திற்கான தேடல்களும், அதற்கான குரல்களும் இருக்கவே செய்தன..! இன்றைக்கு திரும்பிப் பார்த்தாலும் பிரமிக்கதக்க மாற்றங்கள் நடந்துள்ளதை உணரமுடிகிறது..! தமிழ்ச் சினிமா பேசத் தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்நாளில், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது . அமெரிக்காவில்அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், வெளிநாட்டு படங்களுக்கான ...

என்ன பெரிசா நடந்துவிட்டது..? ஜவகர்லால் நேரு புகைப்படம் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் முதல் வரிசையில் இடம் பெறவில்லை..! அவ்வளவு தானே…? இதுக்கே இப்படி குதித்தால் எப்படி.? இன்னும் மகாத்மா காந்தியை விட்டு வைச்சிருக்கோம்..அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..? வீரசாவர்க்கர் போன்ற மகான்கள் வரிசையில் காந்திக்கும் இடம் தரப்பட்ட பெருந்தன்மையை போற்ற வேண்டாமா? பாட புத்தகங்களில் ரவீந்திரநாத் தாகூரையே காலி பண்ணியாச்சு..இன்னும் என்னென்னவோ இருக்கே..! இந்த ரீதியில் தான் பாஜக அரசு பயணப்பட்டுக் கொண்டுள்ளது..! இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் என்பது ஒன்றிய கல்வி ...

சமரசமற்ற ஒரு நேர்மையான அதிகாரியால் எழுதப்பட்ட சமகால வரலாறு!  நேர்மையாக இயங்குவது எவ்வளவு கசப்பான அனுபவங்களைத் தரும், எதிரிகளை உருவாக்கும், நெருப்பாற்றில் நீந்த வைக்கும்… என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார் நல்லம்ம நாயுடு. ஆனால், இவரது நேர்மையின் உறுதிப்பாடு இல்லாமல் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு சென்று இருக்க வாய்ப்பில்லை என அறியும் போது வியப்பாக உள்ளது..! காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரையிலான ஆளுமைகளை சரியாக அடையாளப்படுத்துகிறார்! நேர்மை என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டியது. ஆனால் அப்படி இருக்கும் சிலரையும் அதில் இருந்து தடம் ...

தொல்லியல் துறை என்றாலே பாஜகவினர் ஏனோ அலறுகின்றனர்! அவர்களை பொறுத்த அளவில் வரலாறு என்பது கற்பனையும், மாயைகளும் கொண்டு கட்டி எழுப்பப்படுவது! அதற்கு பெரும் இடையூறாக தொல்லியல்துறை இருப்பதாக கருதுகிறார்கள்! அதனால் தான், இந்தியாவில் இருக்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டு கிளையை காலாவதி ஆக்கிவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். இதை எதிர்த்து தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வரலாற்று அறிஞர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஆனால், தொல்லியல் துறை மூலமாக கல்வெட்டுகள், புராதனப் பொருட்கள் இல்லாமல் வரலாறு என்பதே உருவாகி இருக்க வாய்ப்பில்லை. ஆதாயங்களை கருதி ...