காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் மத நல்லிணக்கத்துக்கான  ‘மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால்,கோவையில் மட்டும் அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது..! தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்பது பல கட்சிகள், பொது அமைப்புகளின் சேர்வையாகும்! இதன் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்’ எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டன! மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் ...

எப்போதோ அமைக்கப் பட்டிருக்க வேண்டியது! என்றோ கொண்டாடப்பட்டு இருக்க வேண்டியவர்! என்றென்றும் நாம் நினைவில் வைத்து பின்பற்றத் தக்க முன்னோடி அயோத்திதாசருக்கு தற்போது தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க போவதாக அறிவித்து உள்ளது! தமிழ் நாட்டின் மாபெரும் பகுத்தறிவு சிந்தனையாளர், புரட்சியாளர்,மானுட தர்மத்திற்காக வாழ்ந்தவர், மனு தர்மத்தை எதிர்த்த தீரர். முன்னோடி பத்திரிகையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மிக, மிக காலதாமதமாக தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது என்றாலும், இப்போதாவது – அவரது 175 பிறந்த ஆண்டிலாவது சாத்தியப்பட்டுள்ளது – என்பதில் – மகிழ்ச்சியாக உள்ளது. ...