கடுமையான பொருளாதார நெருக்கடி, தகுதிக்கு மீறிய ராணுவச் செலவுகள், ஊழல் நிர்வாகம்.. இதன் தொடர்ச்சியாக இம்ரான்கானின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது! மதவாத உணர்ச்சிகளைக் கடந்து, மக்கள் சரியான தலைவரை பாகிஸ்தானில் தேர்ந்தெடுப்பார்களா? ராணுவத்தின் சாய்ஸ் யார்? மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார் இம்ரான்கான்! பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கெதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான் கட்சி உறுப்பினர்கள் சிலரே அணி மாறி ஆதரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் பதவி இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இம்ரானின் ” கடைசி பந்து ...
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...