நான் 20 நூல்கள் எழுதி இருந்தாலும், தற்போது சில மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் நான் எழுதிய கட்டுரைகள் நூல் வடிவம் காணத் தொடங்கின! இவை பற்றி சில தகவல்கள்; உலக நாடுகளில் தமிழர்கள், கண்டதும் கேட்டதும், சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், நெஞ்சு பொறுக்குதில்லையே உடைபடும் மாயைகள், விடை தேடும் வினாக்கள், சங்கராச்சாரியார் கைது – குழப்பங்களும் விளங்கங்களும், சன் குழுமச் சதிகளும் திமுகவின் திசை மாற்றமும், சங்கராச்சாரியாரும், இந்து மதமும் – மறைக்கப்பட்ட உண்மைகள், எத்தனை காலம் ...

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை திமுக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? திமுக அரசின் மீது, முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பாசம், அக்கறை என நான் ஆச்சரியப்படுகிறேன். ஆளுநர் தன்னுடைய கர்ண கடூரமான, முட்டாள்தனமான, ஏற்றுக் கொள்ளவே முடியாத அடாவடி பேச்சுக்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் தன்பால் திருப்பிக் கொள்கிறார்! எதையாவது அடிக்கடிப் பேசி, நம் அனைவரையும் சரியாக உசுப்பிவிடுகிறார்! அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு அதுவே நமது ...

க.செபாஷ்டின், வேலூர் உழைத்தவர்களை ஓரம் கட்டி ஒண்ட வந்தவர்களுக்கு அரியாசனம் தருகிறது தலைமை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அங்கலாய்துள்ளாரே? திமுக தொண்டர்கள் பலரின் குமுறலாக அவர் வெளிப்பட்டுதாகவே கருதுகிறேன். அதிமுக தலைமை கழித்துக்கட்டிய எச்ச.சொச்சங்களைக் கொண்டு தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ன? அதிமுகவில் இருந்து வந்த எட்டு பேருக்கு தற்போது அமைச்சர் பதவி! இது போல மாவட்டம் தொடங்கி ஒன்றியம்,வட்டம் வரை அதிமுகவில் இருந்து வந்தவர்களே திமுகவை ஆக்கிரமித்துள்ளனர். சொந்தக் கட்சிக்காரனுக்கு சூனியம்! அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு ...

மு. ரத்தினவேல், விருதாச்சலம் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நாடக் லேபிட்டின் காஷ்மீர் பைல்ஸ் பற்றிய விமர்சனம் சரியானது தானா? நாடக் லேபிட் கூறி இருப்பதாவது; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ஆல்  தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது ...

ஆளுநரிடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும்…என்கிறார் அமைச்சர் ரகுபதி. முதல்வரோ மெளனம் சாதிக்கிறார்! இளைஞர்களை தற்கொலைகளுக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் மறுப்பதன் பின்னணி என்ன? இளைஞர்களைக் கடுமையாக பாதிக்கும், எதிர்காலத்தையே  சூறையாடும், தற்கொலைக்குத் தூண்டி குடும்பங்களை நிர்மூலமாக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் அனுமதிக்க மறுத்துள்ளார்! கொஞ்சக் காலம் அதைக் கிடப்பில் போட்டு ஆளுநர் மறுத்தது ஒரு அநீதி என்றால், மறுத்த ஆளுநரை ...

அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம் ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர். ”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். ”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ...

பாண்டித்துரை, அரசரடி, மதுரை கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்? ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல! மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார். க.செபாஷ்டின், வேலூர். ‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..? நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி ...

எஸ். ராமநாதன், திருச்செந்தூர் எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்? யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது! தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார். அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்! உண்மையில் ...

சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்த உண்மையான மதிப்பீட்டைத் தருக! பாராட்டத்தக்க அம்சங்கள்; இறையன்பு, உதயச் சந்திரன் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகளைத் தந்து ஓரளவுக்கேனும் சுதந்திரமாக இயங்க அனுமதித்து இருப்பது! பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம் போன்ற மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ள ஒரு அமைச்சரவை! ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஓரளவுக்கேனும் நடவடிக்கைகள் எடுப்பது! நமது அறத்தில் வெளியான சில கட்டுரைகளுக்குமே கூட உடனடி ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்து மாற்றங்கள் நடந்தன! அதிமுக ஆட்சியாளர்களைப் ...