அ.தி.மு.க ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி சொல்படி செயல்பட்ட   ஊழல் தலைமைப் பொறியாளர்களைப்  பற்றி  அறம் ஆன்லைனில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து  ஊழல் பெருச்சாளிகளான தலைமைப் பொறியாளர்கள் கீதா, சாந்தி, விஜயா, சென்னையில் பாலப் பணிகளை விரைந்து முடிக்க முனைப்பு காட்டாத சுமதி ஆகியோரை  இந்த அரசு பணியிட மாறுதல் செய்தது பாராட்டக்கூடியதாக இருந்தது! ஊழலற்ற ஆட்சியைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் இந்தத் துறையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் அந்த  நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஊழலின் நாற்றம் வெளியேறி விடாமல் பார்க்கும் ...

அதி மோசமான கடந்த அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள் ஒரு பக்குவத்தை பெற்றிருப்பார்கள் என மக்கள் நம்பினார்கள்! ஒரு பக்கம் மக்கள் விரோத – மாநில உரிமைகளை பறிக்கும் பாஜக ஆட்சியை எதிர்க்க வேண்டிய சரித்திர கடமையையும் திமுக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் எப்படி இந்த ஊழல்களுக்கு துணை போகிறது? முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இது போனதா எனத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் சில நல்ல முன்னேற்றங்கள், பாசிட்வ்வான அணுகுமுறைகள் நிதித் துறை, ...

பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்  துறையில் நடந்த ஊழல்களை, அந்த ஊழல்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்கிற விவரங்களைக் கண்டுபிடிக்க அதிவேகப் பாய்ச்சலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க ஆட்சியின் நெடுஞ்சாலைத்  துறை அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது நோக்கம் ஊழலை ஒழிக்கவா? ஒளிக்கவா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..! அதிமுக ஆட்சியின் ஊழலை  அம்பலப்படுத்த சாலைகளில் ஆய்வு எ,வ.வேலுவின் கவனம் முதலில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ‘ஐந்து வருட குத்தகை ஊழல்’ மீது சென்றது. 4,500 கோடி ...

ஊழல் செய்வதற்காகவே போடப்பட்ட சாலை திட்டங்கள்! அதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள்! அதற்கான ஒப்பந்தக்காரர்கள்..என இயங்கியதே நெடுஞ்சாலைத் துறை! அப்போது நடந்த ஊழல்களை கண்டுபிடிக்க போவதாக தற்போது நடந்து கொண்டிருப்பது கண் துடைப்பா..? உண்மையா…? ஊழல் பெருச்சாலிகள் தண்டிக்கப்படுவார்களா…? கடந்த 10 ஆண்டுகளாக  தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் சாலைகளுக்கும் பாலங்களுக்கும் என செலவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக முறைகேடுகள் நடந்ததை ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. ...

லஞ்சத்தை நம்பும்  அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும்  அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது..அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த லைசென்ஸாக கருதும் மனநிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது! அரசியல்வாதிகளுக்கு தோதாக சட்ட, திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகளை விளக்கினால் நெஞ்சே வெடித்துவிடும்..! 2011 முதல் இன்று வரை எடப்பாடி பழனிச்சாமி தான் நெடுஞ்சாலைத்துறையை நிர்வகிக்கிறார்! ‘’மனுக்களைக்  காகிதங்களில் எழுதி வாங்கி, பெட்டிகளில் ...