இன்று ஏழாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது அறம்! எந்தச் சார்புமற்று, யதார்த்தங்களை, பொதுநல பார்வையோடு எழுதுவதை வாசிப்பதற்கும் ஒரு கணிசமான வாசகர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை அறம் உருவாக்கியுள்ளது! இது ஒரு சிற்றிதழ் தான்! எனினும் இதன் வீச்சு பல தளங்களிலும் எதிரொலிக்கிறது என்றால், உண்மையை நேசிக்கும் வாசகர்கள் இதனை பார்வர்டு செய்து பல தளங்களுக்கும் கொண்டு சேர்ப்பது தான்! இன்றைய தினம் அறம் இணைய தளத்திற்குள் வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது என்பதானது அறம் சார்ந்த வாசகர்களின் ஆர்வத்தை தான் ...

அந்தகார இருள் படிந்திருக்கும் சமூகத்தில் அறத்தின் ஒளியை பாய்ச்சியவாறு ஆறாம் மாதத்தில் காலடி எடுத்து வைக்கிறது நம் அறம் இணைய இதழ்! அறிவில் சிறந்த ஆன்றோர்களும், கல்வியில் சிறந்த சான்றோர்களும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து தட்டிக் கேட்டால் தான் ஒரு சமூகத்தில் அறம் தழைக்கும்! அப்படி நடக்காவிட்டால் நாமும் அமைதியாய் இருந்துவிட்டு போவோமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை! பொது நலனுக்கு குரல் கொடுக்க, பணியாற்ற, நேர்மையான யாருக்கும் உரிமையுண்டு! சில நேரங்களில் இதில் சந்திக்க நேரும் அவமானங்களும்,ஆபத்துகளும் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், அறச் சீற்றங்களை அழுத்தி ...

ஐந்தாவது மாதத்திலேயே பரவலாக அறியப்பட்ட இணைய இதழாக அறம் தெரியவந்திருக்கிறது என்பது நேர்மையான இதழியலுக்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்! எந்தப் பெரிய நிறுவனப் பின்புலமின்றி, பொருளாதார பலமுமின்றி, கடும் உழைப்புடன் கூடிய சமூக அக்கறையையையும், அனுபவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அறம்! ”நல்லோர் சிலர் உள்ளோரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’’ என்பதற்கிணங்க வெகு சில வாசகர்கள் அனுப்பும் சந்தாவைக் கொண்டு அனைவரும் கட்டணமின்றி படிக்கும் வகையில் அறம் தொடர்ந்து வருகின்றது. அறம் சமூகத்தின் அவசியம் என நினைக்கும் வாசகர்களால் ...

அறம் வாசக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்! அறம் நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்து பயணிக்க தொடங்கிவிட்டது! நாள்தோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன! படிக்கும் வாசகர்களால் மேன்மேலும் பகிரப்படுவதன் வாயிலாகவே இந்த வாசகர்தளம் வளர்ந்து கொண்டுள்ளது! வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக அறம் வந்து கொண்டுள்ளது. ஆணவமிக்க அதிகாரமையத்திற்கு எதிரான அறச் சீற்றங்கள் சமரசமற்ற விமர்சனங்கள்! எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படும்,குழப்பமற்ற தெளிவான பார்வை! பாசாங்கில்லாமல் நேர்பட எழுதும் எளிமை! இவையே அறத்தின் இயல்பாக வெளிப்பட்டு வருவதை நீங்கள் உணரலாம்! ‘ஊருக்கு உழைத்திடல் ...

www.aramonline.in மூன்றாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது..! பொய்மைகளாலும்,மாயைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஊடகச் சூழலுக்குள் ஒளிபாய்ச்சும் ஒரு சிறு அகல்விளக்காய் அறம் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சுடரின் வீரியத்தை நீங்கள் நாளும் பல கட்டுரைகளில் பார்த்து வருகிறீர்கள்! பரப்பியும் வருகிறீர்கள்! பொது நலன் சார்ந்து, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் வெளிவரும் அறம் இணைய இதழை தொடர்ந்து வரச் செய்வது வாசகர்கள் பங்களிப்பில் தான் உள்ளது. சமூகத்திற்கான தேவை என்னவென்று நாம் உழைத்துக் கொண்டிருந்தால், நமக்கான தேவையை அந்த சமூகமே அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ளும் என்ற ஒரு ...