‘இந்த இ.எஸ்.ஐ எல்லாம்இனி தேவையில்லை. தொழிலாளர்கள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு போகட்டும்’ என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் ஆர். நடராஜன் நேர்காணல். தமிழகத்தில் மட்டுமே 18,000 க்கு அதிகமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயில் இணைந்து பலன் பெற்று வருகின்றனர். இந்தியா முழுமையிலும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மருத்துவப் பலன்களை பெற்று வருகின்றனர். ”பாஜக அரசு கொண்டு வந்துள்ள Code on Social Security, ...

பாஜகவின் லட்சியங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா! ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் உயிர்பித்து இருக்கக் கூடாது. அவ்வளவு ஏன் ஒரு பலவீனமான கட்சியாகக் கூட அது ஜீவித்திருக்கக் கூடாது என்பது தான் பாஜகவின் இலக்கு! இதை பல மேடைகளில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! அதே சமயம் அந்த அழித்தொழிப்பை அவர்கள் ஜனநாயக வழியில் செய்வதற்கு செய்வதை விடவும், ஆள்தூக்கி அரசியல் வழியாக – பேர அரசியல் வழியாகத் –  தான் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தினார்கள். நமக்கு மிக ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1 அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..! நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும்  குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய  19 மாதங்களாக பள்ளிக்கு ...