Khufiya  என்றால் ரகசியமாகும். தபு உளவு அதிகாரியாக வருகிறார். நாட்டு ரகசியங்களை இந்திய உளவு அமைப்பான ரா (RAW)  அதிகாரி கடத்துகிறார்.  அவரை பொறி வைத்து பிடிப்பதே கதை. உளவு, துரோகம், தேசப் பற்று..போன்றவற்றைச் சொல்ல இஸ்லாமிய வெறுப்போ, பாகிஸ்தான் எதிர்ப்போ இல்லாத விறுவிறுப்பான, திரில் படம்! ராவில் பணிபுரிந்த அமர்பூஷன் எழுதிய Escape to nowhere என்ற நூலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹைதர் மற்றும் மக்பூல் போன்ற பாராட்டப்பட்ட படங்களை எடுத்த விஷால் பரத்வாஜு இதை சினிமாத்தனம் இல்லாமல் எடுத்துள்ளார். ...

ஜெகத்ரட்சகன் சொத்து விபரங்கள் இவர் ‘தமிழகத்தின் அதானி’ எனச் சொல்கிறது! திமுகவின் கஜானாவாக அறியப்படும் ஜெகத்ரட்சகன் இனியும் திமுகவில் செல்வாக்குடன் தொடர்வாரா?  பாஜகவை நோக்கி நகர்வாரா? அல்லது பொருளாதார பேரம் நடத்தி பாஜக தலைமையை சரிகட்டிவிடுவாரா..?  15 க்கு மேற்பட்ட கல்லூரிகள், நட்சத்திர ஹோட்டல்கள், உயர்தர மருத்துவமனைகள், நிலக்கரி சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மதுபான தொழிற்சாலை.. என அரசியலையே முதலீடாக்கி மிகப் பெரிய கார்ப்பரேட் ஆன ஜெகத்ரட்சகன் மக்களுக்கு செய்தது என்ன? ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் ஐந்து நாட்களாக ரெய்டுகள் நடந்தன! ...

இன்றைய அரசியல் சூழல், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை விஞ்சுகிறது!  இந்த அசாதாரண சூழலை “தி இந்து” நாளிதழ், ‘இது ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை’ என எழுதியுள்ளது. பலவிதங்களில் ஒப்பிட்டு பார்க்கையில், ‘இன்றைய சூழல் அறிவிக்கப்படாத அவசர நிலையே’ என இந்த கட்டுரை விவரிக்கிறது; இன்று நிலவும் சூழலை இந்திராகாந்தியின் 1975-1977 எமர்ஜன்சி காலத்தோடு ஒப்பிடுவது சரியா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டு, சில உரிமைகளையும், சுதந்திரங்களையும் மக்களுக்கு மறுத்த, அந்த இரண்டாண்டு  காலமும்,  இப்பொழுது கடந்த  ஒன்பது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் ...

வரும் தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி மோதலாம். தனித்து கூட்டணி அமைத்தே அனைத்து தொகுதிகளிலும் வெல்வார்களாம்…!  சண்டைகள், சர்ச்சைகள், அதிரடி வெறுப்பு பேச்சு, கூட்டத்தை கூட்டும் திறமை.. ஆகியவற்றால் பாஜக வளர்கிறதா? அண்ணாமலை  பாஜகவை வளர்த்து விட்டாராம்! உப்புக் கல் வைரமாகுமா..? கூட்டத்தை கூட்டிக் காட்டியதன் மூலம் தன்னைத் தான் பெருந் தலைவராக நினைக்கிறார் அண்ணாமலை. எப்போதும் பேசுபடு பொருளாக சர்சையை ஏற்படுத்துவதால் தலைவராகிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். உண்மையில் தனக்கென்று உண்மையான ஒரு நட்பு வட்டத்தைக் கூட ஏற்படுத்த முடியாத தனி மரமாகவே ...

உண்மையின் உக்கரத்தை சகிக்க முடியாத ஆட்சியாளர்கள் தங்களின் பதட்டத்தை இந்த ரெய்டிலும், கைதிலும் வெளிப்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள். உண்மைகளை பேசி, அரசை கதிகலங்க வைத்தவர்கள். இந்த கைதின் பின்னணி என்ன..? அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தில்லி காவல்துறை நியூஸ் க்ளிக் என்ற ஆங்கில இணைய இதழ் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள்.. என பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அவர்களது கைபேசி மற்றும் ...

வன்மம், வெறுப்பு, துவேஷம்..ஆகியவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலமே தங்கள் சாம்ராஜ்யத்தை கட்டமைக்கிறது பாஜக என்பதை கள ஆய்வு செய்து ஆதாரங்களுடன் எழுதியுள்ளது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்! கர்நாடகத் தேர்தல் களத்தை, நேரில் பார்வையிடச் சென்ற வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர்கள், களத்தில் பல வாரங்களைச் செலவிட்டார்கள். அப்போது, செய்தி அனுப்பும் மிகப் பெரும் இயந்திரங்களையும், அதை இயக்கும் மனிதர்களையும், அவர்கள் சந்தித்தனர். அவர்கள் அளித்த நேர்காணல்கள் மூலம் பா. ஜ. கவும், அதன் நட்பு இயக்கங்களும் எவ்வாறு பெரும்பான்மை ...

அரசியலுக்கும், வியாபாரத்திற்கும் இன்று சமூக ஊடகங்கள் அடிநாதமாகத் திகழ்கின்றன. சமூக ஊடக நிறுவனங்களின் நிர்வாக அணுகுமுறைகளில் பல சூட்சுமங்கள் உள்ளன. ‘ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே…’ என்பதற்கேற்ப சைபர் ஊடகங்கள் எப்படி நம் நேரத்தைக் கொல்கின்றன, நம் ரசனைகளை கட்டமைக்கின்றன.. என ஒரு அலசல்; முகநூல், யூ டியூப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து  யாரும் விடுபட முடியாது. ஆனால் அவைகள் வெறுப்பை விளைவிக்கும் செய்திகளை பரப்புகின்றன. அற்பத்தனமான தலைப்புகளில் செய்திகளை வெளியிடுகின்றன. நுகர்வோரை சமூக வலைத்தளங்களில் இருந்த விடுபட முடியாத அளவுக்கு, ...

அதிகார வர்க்க மூர்க்கத்தின் சாட்சியம் தான் வாச்சாத்தி சம்பவம்! வார்த்தைகளில் சொல்ல இயலாத துயரங்களை அனுபவித்த எளிய பழங்குடிகளுக்கான நீதி, 31 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகே சாத்தியமாகியுள்ளது – இருதரப்பிலும் பலர் உயிருடன் இல்லாத நிலையில்! எனினும், இந்த கண்ணீர் வரலாற்றில் கிடைத்த படிப்பினைகள் பற்பல; தருமபுரி மாவட்டம் அரூர் அரிகிலுள்ள சித்தேரி மலையடிவாரம் கிராமமே வாச்சாத்தி. மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் இந்த கிராமம், தண்ணீர் பற்றாகுறையுள்ள இடம் என்பதால் மானாவாரி சிறுதானியப் பயிர்களே இவர்களின் வாழ்வாதாரமாகும். வறியவர்களிலும் வறியவர்களான இந்த மக்கள் ...

”அரசாங்கத்தையே தட்டிக் கேட்பீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பீர்களா? அநீதிகளை அரங்கேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதா? எனில் உங்களை எங்களால் பழி வாங்க முடியும்! கெஞ்ச வைப்போம், கொந்தளிக்க வைப்போம், கையறு நிலையில் கதற வைப்போம் ..ஜாக்கிரதை” என நீதித் துறையோடு மோதும் பாஜக! பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் பொதுத் தன்மையையும் சிதைக்கும்படி தனக்கு சாதகமான நபர்களை உயர்பதவியில் அமர்த்தி, தான் நினைத்ததை சாதித்து வருகிறது. அதே போல, ‘நீதித் துறையிலும் தனக்கு ...

‘பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கொத்தத் தான் செய்யும். பாஜகவுடன் நட்பு என்பது தற்கொலையை தவிர வேறில்லை.. என அதிமுக உணர்ந்திருந்தாலும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமா? நிரந்தரமா? அதிமுகவை நிம்மதியாக விட்டுவைக்குமா பாஜக ? எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள்..? எனப் பார்க்க வேண்டியுள்ளது; கூட்டணி முறிவை ஒட்டுமொத்தக் கட்சித் தொண்டர்கள் எழுச்சியுடன் ஆதரிக்கிறார்கள்! ஆனால், தலைவர்கள், நிர்வாகிகள் சிலரிடம் தடுமாற்றங்கள் இருக்கின்றன. தொண்டர்களின் எழுச்சியை, வரவேற்பை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள முடியுமா? பாஜக பழிவாங்கும் படலத்தை தொடங்கினால் ...