பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம் பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன! மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. ...
இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார். வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள் முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை ...
ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை. “ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன். ”ஏன்..? என்றார். “இல்ல தோழர், முன்பு நீங்கள் ...