சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த ...
தமிழின் முதல் சமூக நாடகமாகவும், திரைப்படமாகவும் கருதப்படும் டம்பாச்சாரி 150 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்ச் சமூகம் சந்தித்த அவலங்களை அப்பட்டமாக தோலுரித்தது. அதன் தாக்கம் முக்கால் நூற்றாண்டு நீடித்தது. டம்பாச்சாரியும், ரத்தக் கண்ணீரும் காட்டும் சமூக நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன; எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ரத்தக் கண்ணீர் நாடகமும், திரைப்படமும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் வெளியான பிறகும் ஊர்தோறும் ரத்தக் கண்ணீர் நாடகத்தை சுமார் கால் நூற்றாண்டுகள் நடத்தியிருப்பார் எம்.ஆர்.ராதா! ரத்தக் கண்ணீர் நாடகத்தை எழுதியது திருவாருர் தங்கராசு. இவர் ...
இளையராஜா இத்தனை வயதுக்கு பிறகாவது பெருந்தன்மையையும், பக்குவத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அவர் தன் பேராசையால் பெருமளவு நட்பு வட்டாரத்தை இழந்தது போதாதா..? திரை இசை பாடல்களுக்கு முழு உரிமை கோரும் இளையராஜா வழக்கு ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது; பல ஆண்டுகளாக திரை இசை பாடல்களுக்கு இளையராஜா முழு உரிமை கோரும் வழக்கில் நேற்றைய தினமான ஏப்ரல்-24, 2024 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் கொண்ட அமர்வு கேட்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. “ பாடலின் வரிகள், பாடலைப் பாடும் ...
டி.எம்.கிருஷ்ணாவிற்கான சங்கீத கலாநிதி விருது சர்ச்சையானதில், பெரியார் தான் பார்ப்பன சமூகத்தின் ‘டார்கெட்டாகி’யுள்ளார்! கிருஷ்ணாவை ஆதரித்து பொதுச் சமூகமே வாள் சுழற்றிக் கொண்டுள்ளது. ஆனால், தன்னை முன்னிட்டு, பெரியார் தாக்கப்படுவது குறித்து, தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பதன் பின்னணி இது தான்; கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து தான் பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்திரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ...
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவது சர்ச்சையாகி, பொதுத் தளத்தில் கிருஷ்ணாவிற்கு பேராதரவு ஏற்பட்டுள்ளது! பார்ப்பனர்களில் ஒரு தரப்பே கிருஷ்ணாவை ஆதரிப்பதால், அவர் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பெரியார் தாக்கப்படுவது குறித்து தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பது ஏன்? டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளாக முற்போக்காளராக அடையாளம் காட்டப்பட்டும், புகழப்பட்டும் வருகிறார்! திராவிட இயக்கத்தாரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் அவரை புகழ்கின்றனர். மீனவர் குப்பத்திற்கு சென்று அவர் கர்நாடக இசை கச்சேரி நடத்தியது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளானது. அதன் விளைவாக, ராமன் ...
சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது; உரையாடலால் உயர்ந்தான் மனிதன். மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான். பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது. எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் ...
அதிசயக் கலையான அவதானம் தமிழர்களின் தொன்மைக் கலையாகும்! இது மிகக் கடும் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும்! ஒரே நேரத்தில் எட்டு முதல் 16 வகையான செயல்களை பிசிறின்றி மிகுந்த நினைவாற்றலுடன், மனப் பயிற்சியுடன் செய்து பெருவியப்பை தோற்றுவிக்கும் இந்தக் கலையின் இன்றைய நிலை என்ன? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை, ஒரு கைகளே உள்ளன! நம்மைப் போலவே உள்ள அவதானிகள் ஒரே நேரத்தில் பத்து தலைகளோ, இருபது கைகளோ இருக்கின்ற அதிசயப் பிறவி போல பல அவதாரங்கள் எடுத்து செயல்படும் கலையே அவதானக் கலையாகும்! ...
சட்டம், வாதங்கள், நீதிமன்றம் என்ற பின்னணியில் விதவிதமான வழக்குகளை எடுத்து கொண்டு, அதில் நீதிக்கான போராட்டத்தை விறுவிறுப்பாக காட்டும் இது போன்ற வித்தியாசமான கதைக் களங்களை எடுப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாடகத்தனமில்லாமல் யதார்த்தமாகவும், சுவாரஷ்யமாகவும் எடுத்துள்ளது வியப்பளிக்கிறது! இயக்குனர் ஷெபாலி பூஷன் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள பத்து எபிசோடுகள் கொண்ட வெப் தொடர் தான் ‘Guilty Mind’. ஒவ்வொரு எபிசோடிலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படுவது வெகு சுவாரஷ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தீபக் ராணா மற்றும் கஷாஃப் குவாஸ் கதாபாத்திரத்தில் ...
சமகால சமூக, அரசியலின் பிரதிபலிப்பே ரவிபேலட் ஓவியங்கள்! ஓலையில் எழுத்தாணியில் தொடங்கி, பேனா, பென்சில், பிரஸ் என்று மாறி, oil painting, water colour, acrylic போன்ற வடிவங்களை கடந்து, கணினி டிஜிட்டல் ஓவியங்கள் மனதை அள்ளுகின்றன! அறச்சீற்றங்களை அற்புத ஓவியமாக்கும் ரவியோடு நேர்காணல்; மதுரையைச் சார்ந்த ஓவியரான ரவி பேலட் சென்னையில் டிஜிடல் ஓவியக் கண்காட்சி நடத்தி வருகிறார். கலைகளின் முக்கியத்துவம், பள்ளிகளில் அவைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம், டிஜிடல் ஓவியங்கள் போன்றவை குறித்து பேசுகிறார். கண்காட்சி நடந்து வரும் சோல் ஸ்பேஸ் ...