விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள ...

பொய்களால் பொழுதளந்து, மாயைகளால் வரலாறு படைத்து, இல்லாத வரலாற்றுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள்! பரத நாட்டியமாம்!  அதென்ன பரத நாட்டியம்? அது யாரிடம் திருடப்பட்டது? யாரால் திருடப்பட்டது? எப்படி மடைமாற்றம் செய்யப்பட்டது? தமிழரின்  தொன்மையான நாட்டிய மரபு  தொலைந்தது எப்படி? 1935க்கு முன்னால் யாராவது ‘பரதநாட்டியம்’ என்று சொல்லியிருந்தால் “அப்படின்னா…. என்ன?” என்று தான் மக்கள் எதிர்கேள்வி வைத்திருப்பார்கள்! அப்படியொரு பெயாரால் தமிழகத்திலோ, அல்லது வேறு எங்குமோ யாருமே அது வரை  நாட்டியமாடியதில்லை. பரதநாட்டியம் என்ற பெயர் தமிழர் பண்பாட்டு மரபில் எந்த தமிழ் இலக்கியத்திலும் ...

லாபம் எதிர்பார்க்கலை. கலை வெளிப்பாட்டிற்கான வாய்ப்பும், மக்களின் கைதட்டல்களும் போதுமானவை! ஜனங்க முன்னால் நடிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தான் எங்களையும், நாடகக் கலையையும் உயிர்ப்போடு வைத்துள்ளன! பொன்னியின் செல்வன் நாடகத்தை கட்டணமின்றி காணலாம்! எண்ணற்ற தொலைகாட்சித் தொடர்கள், ஏசி மால்களில் சினிமா, யூ டியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திலும் மேடை நாடகங்களை விடாமல் நடத்தி வரும் கலைஞர்களுக்கும் பஞ்சமில்லை என்பது வியக்க வைக்கிறது! பொன்னியின் செல்வன் நாடகம் சென்னையில் ஏப்ரல் 16 அன்று மீண்டும் அரங்கேற உள்ளது. பார்வையாளர் ...

 50 வருடங்களாக கேட்டு உருகியும், மயங்கியும், நெகிழ்ந்தும், அழுதும், தவித்தும் நம்மை பலவித மனநிலைகளுக்கு கொண்டு சென்ற கான தேவதையின் குரல் தொடர்ந்து அனைவர் மனதிலும் மேலெழுந்து வருகிறது. வாணி ஜெயராமின் நவரசம் சொட்டும் தேனிசை கீதங்களை மீளவும் நினைவு கூர்ந்தால்.. சில ரகசியங்கள் சொல்கிறது! வாணி ஜெயராம் இந்திய இசை உலகில் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும் அவரது குரலில் மாற்றமோ, நடுக்கமோ, பிசிரோ சிறிதும் இல்லை! இறை ...

 ‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை  மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு  மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது! ஆடல், பாடல், இசை என்ற மூன்றும் இணைந்த வழியில் காட்சிப் படுத்தப்படுகிறது! சமீபத்திய புதுக்கோட்டை வேங்கை வயல் அவலம் நெஞ்சைத் தைக்கிறது. ஸ்ரீராமானுஜர், காந்தி, பெரியார், அம்பேத்கார் தொட்டு எத்தனையோ ஆயிரம் பெரியவர்களின் கருத்துப் பிரச்சாரத்தாலும் உபதேசங்களாலும் சாதி ஒழியவில்லை என்பது மட்டுமல்ல; இன்னமும் ...

ஜான் லுக் கோடார்டு என்பவர் ஒரு கலையுலக புரட்சியாளர்! இலக்கணங்களை மீறிய இலக்கியமாக சினிமாவைக் கையாண்டவர்! வணிகத்தை மையப்படுத்திய சினிமாக்களுக்கு இடையே வாழ்க்கையை மையப்படுத்திய சினிமாவை தந்தவர்! உலக சினிமாவின் உன்னத முன்னோடியாக பார்க்கப்பட்டார்! “ஒரு சினிமாவுக்கு ஒரு தொடக்கம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவுப்பகுதி இருக்க வேண்டும்; ஆனால் அவை அந்த வரிசையில் இருக்க வேண்டியதில்லை” என்கிற புரட்சிகரமான கோட்பாட்டை சினிமா உலகுக்கு அளித்த ஜான் லூக் கோடார்டு என்னும் மகத்தான சினிமா கலைஞன் கடந்த செப்டம்பர் 13ம் நாள் தனது மரணத்தை ...

தாஜ்மகால் இருக்கும் இடம் யாரிடம் இருந்து எப்படி வாங்கப்பட்டது? அங்கு இந்து கோயில் இடித்து கட்டப்பட்டதா? ராம் மற்றும் சூலம் குறியீடுகள் உள்ளனவே? தொல்லியல் ஆய்வுகள் சொல்வது என்ன? அங்குள்ள ரகசிய அறைகளில் என்னென்ன உள்ளன? இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் தயாளன் நேர்காணல்! ஷாஜகான் முறைப்படி இந்த இடத்தை வாங்கினாரா?  மத்தியப்பிரதேசத்தில் ஷாஜகான் மனைவி மும்தாஜ் இறந்த நிலையில் உடலை 6 மாதம் அங்கேயே பாதுகாத்து வைத்து இருந்தனர். மும்தாஜுக்கு  உலகம் போற்றும் நினைவுச் சின்னம் கட்ட வேண்டும் என்ற தேடலில், ...

பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில ...

எதை ஒன்றை சாதிக்க வேண்டும் என்றாலும், குடும்ப பின்புலமோ,பொருளாதாரப் பின்புலமோ தேவை என்பது இந்தியாவில் எழுதப்படாத நியதியாக உள்ளது. மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடிந்த பைக்ரேஸில் ஒரு கூலி தொழிலாளியும் சாதிக்க நினைத்தால் அது சவால் தானே? சென்னை-மந்தைவெளி  ஏ.எம்.கார்டன் குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பா தையல்காரர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். சிறுவயது முதல் பைக் தான் உயிர். படிப்பு ப்ளஸ் டூ தான்! மெக்கானிக் செட்டில் வேலை. அங்கு வரும் கஸ்டமர் ஒருவர் ...

என்னுடன் படித்த சிறந்த ஒவியரான நண்பன் மெனுவேல் இது நாள் வரை என்ன ஆனான் என்பதே தெரியாமல் கவலையோடு இருந்தேன்! ஆனால், அவன் சற்றே மன நிலை பிறழ்ந்த நிலையில், ஏழ்மையில் வாழ்ந்தாலும், உயிரோடு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதே ஆறுதல் அளித்தது! நடிகரும், ஓவியக் கலைஞருமான சிவகுமார் கோவை மாவட்டம் சூளுர் அருகேயுள்ள சின்னஞ் சிறு கிராமமான காசிகவுண்டன் புதூரில் பிறந்து வளர்ந்து இன்று நாடறிந்த பிரபலமாக இருந்த போதிலும், இன்று வரை தன் கிராமத்து நண்பர்கள், ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை ...