நூறு திருக்குறளை வாழ்வியல் தொடர்பான நிஜ சம்பவங்களுடன் கேட்போருக்கு சலிப்பு தோன்றா வண்ணம் சுவைபட ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகுமார்! ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல பெருந்திரள் மக்கள் லயித்துக் கேட்ட அன்றைய நிகழ்வு ஒரு சிறப்பான அனுபவமானது..! நம் காலத்தில்,  தமிழகத்தில், முற்றிலும் வேறுபட்ட விதத்தில் திருக்குறளுக்கு ஓர் அரங்கேற்றம் நிகழ்ந்தது. “திருக்குறள் நூறு..!” என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் அவர்கள், தான் எழுதிய புத்தகத்தை அப்படியே மேடையில் வண்ண விளக்குகள் பளிச்சிட , மிகுந்த உயிரோட்டத்துடன் பச்சைத் தண்ணீர் கூட ...

என்னுடன் படித்த சிறந்த ஒவியரான நண்பன் மெனுவேல் இது நாள் வரை என்ன ஆனான் என்பதே தெரியாமல் கவலையோடு இருந்தேன்! ஆனால், அவன் சற்றே மன நிலை பிறழ்ந்த நிலையில், ஏழ்மையில் வாழ்ந்தாலும், உயிரோடு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதே ஆறுதல் அளித்தது! நடிகரும், ஓவியக் கலைஞருமான சிவகுமார் கோவை மாவட்டம் சூளுர் அருகேயுள்ள சின்னஞ் சிறு கிராமமான காசிகவுண்டன் புதூரில் பிறந்து வளர்ந்து இன்று நாடறிந்த பிரபலமாக இருந்த போதிலும், இன்று வரை தன் கிராமத்து நண்பர்கள், ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை ...

தமிழகத்தின் தலை சிறந்த ஓவியராக ஜொலித்திருக்க வேண்டியவர் எப்படி தனக்குள் இருக்கும் நடிப்பு தாகத்தை கண்டறிகிறார், சினிமாவிற்குள் நுழைகிறார் என்பதையும், தன் சமகால சாதனை ஓவிய பிரம்மாக்கள் பலரையும் அறியத் தருகிறார்…! சிவகுமாரை நடிகனாக தமிழகம் நன்கறியும், சிறந்த சொற்பொழிவாளராகவும் தற்போது அறிந்து கொண்டுள்ளது! ஆனால், அடிப்படையில் அவர் ஒரு அற்புதமான ஓவியக் கலைஞர் என்பது மட்டுமல்ல, அதில் சாதனை படைத்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். ஆனால், இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் தன் சமகால ஓவியர்கள் குறித்தும், தனக்கு முந்தைய முன்னோடிகள் ...

இரா.அன்பழகன், திருப்பரங்குன்றம், மதுரை அதிமுகவில் பிளவு ஏற்படுமா? பிளவு ஏற்பட்டால் யார் கை ஓங்கும்? கட்சி நடத்திச் செல்லும் அளவுக்கு கமிட்மெண்ட் உள்ளவரல்ல ஒபி.எஸ். தொண்டர்கள் ஆதரவுமில்லாதவர். சசிகலாவை நம்பி சென்றால் காலப்போக்கில் காணாமலாக்கிவிடுவார்கள்! கமிட்மெண்ட்டானவர் என்றாலும் தலைவனுக்கான பண்பில்லாதவர் இபிஎஸ்! சசிகலாவும், தினகரனும் தங்கள் சமுதாயம் அளவுக்கு மட்டுமே செல்வாக்குள்ளவர்கள்! ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் சூட்சும அரசியலில் யார் தப்ப முடியும் எனத் தெரியவில்லை! பிளவு தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. பிளவுக்குப் பின் அந்தக் கட்சி நீண்ட நாட்களுக்கு பிழைத்திருக்காது. எஸ்.ராதாகிருஷ்ணன், தேன்கனிக் கோட்டை, ...

நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.காற்றை எப்படி நம் உடலுக்கு கையாள வேண்டும் என்பதை மட்டும் ஒருவர் உணர்ந்து கொண்டால், அவரால் உலகில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளமுடியும் என்பது சித்தர்கள் வாக்கு! உங்கள் கண்களை மூடி நீங்கள் மூச்சை எவ்வாறு உள்ளுக்கிழுத்து வெளிவிடுகிறிர்கள் என்பதை ஆழ்ந்து பாருங்கள்! ஒவ்வொரு சுவாசத்தையும் அனுபவித்து உணர முடிந்தவர்களின் சித்தம் வெகு தெளிவாக இருக்கும்! மூச்சை சிறப்பாக ...

யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை! ’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என்  நிலைப்பாடுமாகும்! எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார்  அவர்களிடம்  பழகிவருவதைப்  இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள ...