கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சோக நிகழ்வு தமிழக அரசின் இத்துப் போன மதுபான கொள்கையில் சில மாற்றங்களை கோருகிறது. மது விற்பனையில் தரமற்ற சரக்குகள், மட்டுமீறிய லாபம், சர்வாதிகார போக்குகள், ஆட்சியாளர்களின்  பேராசை ஆகியவற்றை மறு பரிசீலனைக்கு வேண்டுகிறது இந்தக் கட்டுரை; #  டாஸ்மாக் என்ற பெயரில் மது விற்னையை அரசே தனியுரிமையாக்கிக் கொண்ட பிறகு, தரமற்ற மெல்லக் கொல்லும் சரக்குகளை மக்களிடம் திணித்தவாறு,”கள்ளச் சாராயம் விற்காதே” எனச் சொல்வது எப்படி? அப்படிச் சொல்லும் தார்மீகத் தகுதியே முதலில் நம் தமிழ்நாட்டு அரசுக்கு கிடையாது! ...

கள்ளச் சாராயம், நல்ல சாராயம், விஷச் சாராயம் இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமலே இந்த வார்த்தைகள் ஊடகங்களாலும், மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன! இன்றைய தலைமுறை அனேகமாக நல்ல மதுவை பார்க்காத தலைமுறை! பாரம்பரிய மது குறித்த பரிச்சியமே இல்லாதவர்களுக்கு இதோ  ஒரு அறிமுகம்: பொது புத்தியைப் பொறுத்த அளவில் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது நல்ல சாராயம் என்பதாகவும், கிராமங்களில் அல்லது எங்கோ ஒதுக்கு புறங்களில் காய்ச்சப்படுவது கள்ளச் சாராயம் என்பதும், உயிர் பலி கேட்பது விஷச் சாராயம் என்பதுமே புரிதல்! இது பற்றி ஒரு ...

அகத்திக் கீரை பயன்பாடு குறைவதால் அனாவசிய நோய்கள் உருவாகின்றன! அகத்திக் கீரையை பல வகைகளில் சமைக்கலாம். இது அகத்தை தூய்மையாக்கி, முகத்தை பொலிவாக்கும். மாத்திரை, மருந்து, மது  உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை தீர்க்கும். மருத்துவ செலவுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்; அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக் கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தியர் நிழலில் மூலிகை கொடிகள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை! அகத்தி என்பது அகத்தியருடன் தொடர்புடையது ...

தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய  வரலாறும், மருத்துவ குணங்களும் பிரமிக்கதக்கவை! பழந்தமிழர் தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!  இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல, பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி!  கிராம்பைத் தெரியாதவர் உண்டோ ? இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும், பெருவாரியாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் ...

இந்திய அரசாங்கம் எந்த சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும், அவை ‘மக்கள் நலன்’ என்ற போர்வையில், கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைப்பதாகவே உள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் எல்லாமே சில கார்ப்பரேட் பயனடைவதற்காக என்றால்.., வின்சென்ட் சர்ச்சில் சொன்னது உறுதியாகிறது; பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் இந்தியவிற்கு சுதந்திரம் தருவது பற்றி பேசியதை முதன்முதல் கேள்விப்பட்ட போது, அவர் மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது என்பது உண்மை! ஆனால், தற்போது நினைத்துப் பார்க்கும் போது, ‘அந்த ஆள் இந்தியாவின் தலைவர்கள் ...

உணவு வணிகமானது பசி தீர்க்கும் புனிதப்பணி! ஆனால், வணிகப் பேராசையில் இன்றைக்கு தரமற்ற உணவகங்கள் அதிகரித்துள்ளன. எதையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமோ, அவை இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளன! ஆகவே, அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சிலவற்றை கவனத்தில் கொள்வீர்களாக; தரமற்ற உணவை சாப்பிட்டதால் சில இடங்களில் வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சேர்ப்பு மற்றும் ஒரு சில உயிரிழப்புகளை அடுத்து, சமீப காலமாக உணவுத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களுக்கு ‘விசிட்’ அடித்து உணவுத் தரத்தை ஆய்வு செய்து அக்கறை காட்டி வருகிறார்கள்! உணவுத் துறை அதிகாரிகள் என்பவர்களில் ...

‘சத்து சேர்க்கப்பட்ட அரிசியை தருகிறோம்’ என்பதாக செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் அரிசியில் கலந்து தருகிறார்கள்! இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அயோடின் கலந்த உப்புத் திணிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன்கள் என்ன..? என விளக்குகிறார் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன். அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி ((fortified rice) இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால், அவர்களுக்காக அதில் இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ...

இன்றைய மனித குலம் மாத்திரை, மருந்துகளுடன் வாழ்க்கை நடத்துகிறது! ஒவ்வொரு குடும்பத்திலும் மளிகைக்கு ஒரு பட்ஜெட் இருப்பது போல, மெடிக்கலுக்கும் பட்ஜெட் போடுகிறார்கள்! எந்த மருந்து, மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவு உண்டு! மருந்தே உணவாக மாறுவது ஆபத்து! உணவே மருந்தாக இருந்தால் ஏது நோய்? `உணவே மருந்து மருந்தே உணவு’ என்று சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இன்றைய சூழலில் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாது, உயிர் வாழவும் முடியாது என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிப் போய்விட்டது. ...

‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ‘ -மருத்துவம் சார்ந்த இந்தப் பழமொழியின் பொருள், நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக் கொள்ளக் கூடியது முருங்கைக் கீரை  என்பதாகும்!  பற்பல அரும்பெரும் அற்புதங்களை நிகழ்த்தி பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! இந்தக் கீரையை யார் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ அவர் வயதானாலும் கையில் கம்பு, குச்சி ஊன்றாமல் நடந்து செல்வார் என்பதாகும். முருங்கை கீரை தாய்ப்பால் ஊறச் செய்யும், ஆண்மைக் குறை போக்கும்! ஆனால், நம்மில் பலர் இந்தப் பழமொழியை தவறாக புரிந்துகொண்டு, தங்கள் ...

காய்கறிகள், கீரைகளில் மட்டுமல்ல, கிழங்குகளிலும் சத்துகள், மருத்துவ குணங்கள் உள்ளன! பொதுவாக கிழங்குகள் வாய்வுக் கோளாறை ஏற்படுத்தும் என்பதால் வாய்வு, வாதக்கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பார்கள்! சில கிழங்குகளின் சுவையும், மருத்துவ குணங்களும் அபாரமானவை! எல்லோருக்கும் விருப்பமான உணவுகளில் கிழங்கு வகைகளும் நிச்சயம் இடம் பெறும். கருணைக் கிழங்கு; கிழங்குகளில் கருணைக் கிழங்கை மட்டுமே மிக முக்கியமானதாக வள்ளலார் சொல்கிறார். பெயரிலேயே கருணை குடி கொண்டிருக்கிறது! காரணம், மூல நோய் உள்ளவர்களை கருணை காட்டி குணமாக்கும் என்பதால் தான்! கருணைக் கிழங்கில் இரு ...