கொரோனாவுக்குப் பிறகு பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சொட்டு மூத்திரம், முக்கிக்கொண்டு மலம் கழித்தல், தூக்கமின்மை, வயிறு மந்தம், வயிற்றுவலி என ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். மருத்துவர்களிடம் தீர்வு கேட்டால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிறது. முன்பைப் போல் உடம்பு ஒத்துழைப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் பலரையே பார்க்க முடிகிறது. என்ன சாப்பிட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை என்கிறார்கள். வயது வித்தியாசமில்லாமல் இளம் வயதினர் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி அவர்கள் படும் பாடு சொல்லி மாளவில்லை. `எத்தனையோ டாக்டர்களை பார்த்துவிட்டேன், என்னென்னவோ டானிக், மாத்திரையெல்லாம் ...
மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை என்பார்கள். இந்த பழமொழியைப் போல இப்போதெல்லாம் காய்ச்சல், கொரோனா போன்றவை வந்தாலும் அதன் பிறகும் தொடரக்கூடிய உடல்வலி, தலைபாரம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட சிக்கல்கள் பலரை பாடாய்ப்படுத்தி எடுக்கின்றன. காய்ச்சலை மட்டுமல்ல, அதை தொடர்ந்து வரக்கூடிய தொல்லைகளையும் விரட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே இந்தக்கட்டுரை. இன்றைய சூழலில் இந்தத் தகவல் பலருக்கும் தேவையாக இருக்கிறது என்பது உண்மை. முதலில் இன்றைக்கு வரும் காய்ச்சலை விரட்டுவது பற்றிப் பார்ப்போம். காய்ச்சலில் பல வகை இருக்கலாம். எப்பேர்ப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் ...
மூச்சுத் திணறல், வறட்டு இருமல், சளித் தொல்லை போன்றவை சர்வ சாதரணமாக தற்போது எல்லோரையும் அலைக்கழிக்கின்றன! நுரையீரல் பலம் இழந்தால் கொரானாவும் தொற்ற வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கையான வழிமுறைகளில் நம் நுரையீரலை எப்படி பாதுகாப்பது எனப் பார்க்கலாம். மனிதன் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரும் சிறப்பாக செயல்பட உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் மற்றும் மனம் சரியாக, நன்றாகச் செயல்பட நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நுரையீரல் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், உடற்பயிற்சி ...
ஒருவித சோர்வு, அடிக்கடி மூச்சு வாங்குவது, வேலைகளில் உற்சாகமின்மை, கண்விழியின் கீழ் வெளுத்து இருத்தல், நாக்கு வெளிறி இருப்பது, முகம் வீங்குவது, உடல் பருமனாதல், நெஞ்சு படபடப்பு.. ஆகியவை ரத்த சோகையின் அறிகுறிகள்! இன்றைக்கு பலரையும் பாதித்துள்ள ரத்த சோகையை எப்படி போக்குவது? ரத்தசோகை… இது ஒரு குறைபாடுதான் என்றாலும் உண்டு இல்லையென்று ஆக்கிவிடும். எனவே, இது விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், வேறு வேறு பாதிப்புகள் வந்து நம்மை பாடாய்ப்படுத்திவிடும். தொடக்க நிலையிலேயே கவனிக்காவிட்டால் அடுத்து வரும் நாட்களில் ...
நின்று கொண்டே நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கும், கால்களை தொங்கவிட்டு நாற்காலியில் நெடு நேரம் பணியாற்றுபவர்களுக்கும் வரும் நோயே வெரிகோஸ் வெயின்! நரம்புச் சுருள் நோய் என்று சொல்கிறார்கள். இதை வராமல் தவிர்ப்பது பற்றியும், வந்தால் குணமாக்குவது குறித்தும் பார்ப்போம். மணிக்கணக்கில் நின்றுகொண்டே வேலைபார்க்கும் டீ மாஸ்டர்களை பாதிக்கும் நோய் என்று மட்டுமே முதலில் சொல்லப்பட்டது! இந்த வெரிகோஸ் வெயின். டீ மாஸ்டரை மட்டுமல்ல, செக்யூரிட்டி, மளிகைக்கடைக்காரர், ஜவுளிக் கடை பணியாளர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால் பணியாளர்கள், கண்டக்டர், ஆசிரியர்கள் மற்றும் மணிக் கணக்கில் கம்ப்யூட்டர் ...
உடல் எடையைக் குறைக்க நடையாய் நடக்கிறார்கள். விளம்பரப்படுத்தப்படும் விதவிதமான டயட்டுகளை வாங்கி உட் கொள்கிறார்கள்! இவ்வளவு மெனக்கிடாமல் சுலபமாக எடையை குறைக்க முடியும். தேவையில்லாத தீய உணவு பழக்கத்தை கை விடுங்க, இந்த பாரம்பரிய உணவு பழக்கத்தை கை கொள்ளுங்க! ”ஒரே வாரத்தில் நீங்கள் ஸ்லிம் ஆகலாம், நாங்க சொல்ற டயட்டை ஃபாலோ பண்ணா, ஈஸியா எடை குறைக்கலாம் வாங்க, ஆடு மாடு கோழி என அனைத்தையும் சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்…” என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று ...
அமுக்கரா என்று ஒரு மூலிகை உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கு இது ஆண்மைக் குறையை சரி செய்யும் மூலிகை என்பது தெரியும்!ஆனால், உண்மையில் அமுக்கரா ஓர் அற்புதமான மூலிகை. காய்ச்சலில் தொடங்கி உடல் வலி மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யக் கூடியது. இந்த மூலிகையின் பெயரை உச்சரித்தாலே நம்மை ஒருவிதமாக பார்ப்பார்கள். காரணம், அந்த மூலிகைப் பொடியின் முகப்பில் இதனாலேயே பலர் இந்த மூலிகையை கடைகளில் கேட்டு வாங்கக் கூட கொஞ்சம் யோசிப்பார்கள். அமுக்கராவுக்கு அமுக்கிரா, அமுக்கிரி, அசுவகந்தி, அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, ...
தலைவலிகள் பலவிதம்…! இதில் ஒற்றைத் தலைவலி ஒரு விதம். ஆம்…! ஒற்றைத் தலைவலி வந்தவர்களைக் கேட்டாலே அதன் தீவிரம் புரியும். சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளால் ஒற்றைத் தலை வலிக்கு நிவாரணம் தேடலாம். நம்பிக்கையுடன் இதைச் செய்தால் பலன் கிடைக்கும். ஒற்றைத் தலைவலியானது மண்டை பிளந்தது போன்ற வலியை ஏற்படுத்தி வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் நொந்து போகச் செய்யும். அத்தனை கொடிய ஒற்றைத் தலைவலியைக் கூட நமது மண்ணின் மருத்துவமான பாரம்பரிய மருத்துவத்தில் சரி செய்யலாம். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் ஒற்றைத் ...
புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...
மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்! பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் ...