க.அப்துல்கலாம், ஹைதராபாத். தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்..? அதைத் தான் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறாரே – கூட்டணி கட்சிகளுக்கு குழி தோண்டிய படி! கு. தங்கவேல், நாமக்கல் லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு கிளைமாக்ஸ் இப்போது கேட்க கூடாது என்கிறாரே கமல்? அரசியலைக் கூட சினிமாவைப் போல் தான் அணுகுகிறார் கமல்! ஆதாயங்கள் கிடைக்கும் வரை ஒட்டி உறவாடுவதும், சந்தர்ப்பம் பார்த்து வெட்டிக் கொண்டு விலகிச் செல்வதும், அவருக்கு புதிதல்ல! எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம் சட்டசபை கூட்டத் ...
ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டார், ஓபிஎஸ் என்கிறார்களே..? அவர் விட்டுக் கொடுக்க முன் வந்தது பாஜகவிற்கு! அவர்கள், அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எடப்பாடியின் அதிமுகவிற்கு! முட்டி மோதி முயன்றார், அதிமுகவின் சரிவிற்கு! ஐயோ பாவம்! அதில் அவரே சரிந்து போனார் ! விட்டு ஓடுவதை தவிர வேறு வழியில்லை ஓபிஎஸ்க்கு! லஷ்மணன், பெங்களூர் மக்கள் நீதி மையம் திமுகவை ஆதரிக்கிறதே..? ஐயோ பாவம்! நிலைமை இப்படி ஆகிவிட்டது! பாபு, புதுக்கோட்டை ஷாக்கடிக்கும் தகவல் ஏதாவது ...
க.செபாஷ்டின், வேலூர் உழைத்தவர்களை ஓரம் கட்டி ஒண்ட வந்தவர்களுக்கு அரியாசனம் தருகிறது தலைமை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அங்கலாய்துள்ளாரே? திமுக தொண்டர்கள் பலரின் குமுறலாக அவர் வெளிப்பட்டுதாகவே கருதுகிறேன். அதிமுக தலைமை கழித்துக்கட்டிய எச்ச.சொச்சங்களைக் கொண்டு தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ன? அதிமுகவில் இருந்து வந்த எட்டு பேருக்கு தற்போது அமைச்சர் பதவி! இது போல மாவட்டம் தொடங்கி ஒன்றியம்,வட்டம் வரை அதிமுகவில் இருந்து வந்தவர்களே திமுகவை ஆக்கிரமித்துள்ளனர். சொந்தக் கட்சிக்காரனுக்கு சூனியம்! அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு ...
மு. ரத்தினவேல், விருதாச்சலம் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நாடக் லேபிட்டின் காஷ்மீர் பைல்ஸ் பற்றிய விமர்சனம் சரியானது தானா? நாடக் லேபிட் கூறி இருப்பதாவது; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ஆல் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது ...
கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...
பாண்டித்துரை, அரசரடி, மதுரை கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்? ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல! மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார். க.செபாஷ்டின், வேலூர். ‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..? நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி ...
சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்? உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ...
க.செபாஷ்டின், வேலூர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..? ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை. முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் ...
இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்? கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம். சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர் தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே? பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே! பாலமணி,சென்னை ஆன்மிகம் , அரசியல் மற்றும் ...
எஸ். ராமநாதன், திருச்செந்தூர் எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்? யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது! தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார். அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்! உண்மையில் ...