சுய புத்தியும் இல்லாமல், சொந்த பலமும் தெரியாமல் அடுத்தவர் தயவிலேயே தகுதிக்கு மீறிய பதவிகளை பெற்று அனுபவித்து விட்ட பன்னீர் செல்வம், டெல்லி பாஜக தலைவர்களின் தயவால், தலையீட்டால், மீண்டும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறார்! டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேச முயன்று தோற்றுப் போன பன்னீர் செல்வம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தலையீட்டை பாஜக தயவில் பெற்று அதிமுகவில் அதிகாரமிக்க பதவியை நிலை நாட்டிக் கொள்ள தவிக்கிறார்! அதிமுக பதவியில் இருந்த போது 11 எம்.பிக்கள் தயவும், பாஜக ...

இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் பேசுவதும், எழுதுவதும் சலிப்பாக உள்ளது! வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன..? சின்மயிக்கு ஏதாவது உள் நோக்கங்கள் உள்ளனவா? தனிமனித பலவீனங்களை சமூக அங்கீகாரத்திற்கு தடையாக்கலாமா..? ஒரு படைப்பாளியையும், அவன் படைப்புகளையும் பிரித்து பார்க்க வேண்டுமா..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விவகாரம்..! பல்வேறு குழப்பங்கள், குதர்க்கங்கள் நிறைந்த இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு பிறக்க இந்த கட்டுரை உதவலாம் என நினைக்கிறேன். முதலாவதாக இந்த விவகாரத்தை சாதிப் பற்று, மொழிப்பற்று, கட்டமைக்கப்பட்ட இமேஜ் ...

விவரிக்க முடியாத அதிர்ச்சி,கொந்தளிப்பு. போராட்டங்கள் என ஆந்திரா அல்லோலகலப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறையான விசாகப்பட்டிணம் ஸ்டீல் உற்பத்தி ஆலையை – 36,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 40,000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் வி.எஸ்.பியை பாதுகாத்தே தீருவது என்று ஆந்திரா போர்க்கோலம் பூண்டுள்ளது! வைசாக் ஸ்டீல் ஆலை 1970 ல் இந்திராகாந்தியால் திட்டமிடப்பட்டு நீண்ட நெடிய அடித்தள வேலைகள், தியாகங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்டதாகும். இதற்கு அன்றைய சோவியத் ரஷ்யா பேருதவி செய்தது! இது மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலர் தங்கள் நிலத்தை தானமாக ...

சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...