புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...

மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்! பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் ...

சிறுநீரகம், உடலுக்குள் உள்ள கழிவுகள், நச்சுகளை வெளியேற்றி மனிதன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், மருந்துகள், ஹோட்டல் உணவுகள், கேன்வாட்டர் போன்ற பல காரணிகள் நமது கிட்னிக்கு எமனாக உள்ளன! கிட்னியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? நீர் இறைக்கும் இயந்திரத்தைப் போன்று சிறுநீரகம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடிகிறது. யார் ஒருவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஒரே நாளில் அதிரடியாக பாதிப்பு ஏற்பட்டுவிடாது. படிப்படியாகவே ஏர்பட முடியும்! சம்பந்தப்பட்ட நோயாளியிடம் முழு ...

கோடைக் காலத்தை  எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்! இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ...

கண்ணுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவுகளை விரும்பி, வீழ்கிறோம் நோயில்! பல்வேறு விதமாக  உணவில் நாம் சேர்க்கும் நிறமூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை எனத் தெரிந்து கொள்வோம். உணவு… உயிர்வாழ உதவுகிறது. `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால்,  தவறான உணவு சில நேரங்களில் நோய்களையும் உருவாக்குகிறது. உணவு உணவாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை, என்றைக்கு அது பெரும் வியாபாரப்பொருளாக மாறியதோ அன்றைக்கே அது தடம் மாறிவிட்டது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவில் சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர். ...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முறையான கழிவு வெளியேற்றமே அடிப்படை விதியாகும்! மலச் சிக்கல் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும்! கழிவு வெளியேற்றத்திற்கு கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? இன்றைய சூழலில் நாம் பலவித நோய்களில் சிக்கி தவிக்க ஒழுங்கற்ற உணவுமுறையே காரணம்! கடந்த இதழில் இதுபற்றி விரிவாக கூறி இருந்தாலும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோமோ, அதேபோல் கழிவு வெளியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மலச்சிக்கல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இன்னும் சொல்லப்போனால், பள்ளி மாணவர்கள் மத்தியில் ...