பார்க்கும் நிறுவனங்களை எல்லாம் அதானியின் உடமையாக்குவதற்கும், அவர் கேட்கும் கடன் தள்ளுபடிகளை எல்லாம் வாரி வழங்கி, வங்கிகளை திவாலாக்குவதற்கும் என்றே உருவாக்கப்பட்டது தானா இந்த ஆட்சி..? மக்களின் சேமிப்பை எல்லாம் மன்னவரே திருடனுக்கு தாரை வார்ப்பதா? சேமித்த பணத்தை சுருட்டியவர்களுக்கும், கடன் வாங்கி கம்பி நீட்டியவர்களுக்கும் இந்த நாட்டில் பஞ்சமில்லை என்றாலும், அரசாங்கமே ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவ முடியுமா? என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது. இந்தியாவில் பத்து நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.62,000/- கோடிகளை கடனாகப் பெற்றன, ஆனால், அக்கடனை ...

வெளிநாட்டு முதலீடுகள் தமிழ் நாட்டிற்கு என்ன நன்மைகள் செய்தன? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தின..? மனம் திறந்து விவாதிப்போம். வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு தமிழர்களில் பலரே வளர்ந்துள்ள சூழலில், வெளி நாட்டு நிறுவனங்களுக்காக நாம் இவ்வளவு இழப்புகளை ஏற்க வேண்டுமா? தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு 17 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவில் தொழில் நிறுவன தலைவர்களைச் சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதோடு, ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டு வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் ...

உலக நாடுகள் அனைத்திலும் அதானியின் தொழில் முதலீடுகளை நிறுவுவதே மோடி அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. அதானியின் முதலீடுகளால் வங்கதேச மக்கள் இந்தியாவிற்கு எதிரானது போல.., இலங்கையிலும், நேபாளிலும், பூடானிலும், மாலத் தீவிலும் கொந்தளிப்பு நிலை உருவாகி வருகிறது..! இந்திய அரசின் தேசீய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை Colombo Security Conclave என்ற மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வதாக அங்கு சென்று அந்த நாட்டின்  அரசியல் கட்சி முக்கியஸ்தர்களை- சிங்கள , தமிழ் மற்றும் இஸ்லாமிய தமிழர் தலைவர்களையும் , இலங்கை ...

அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியாதா? பிரதமரே தனக்கு ஏவாளி தான் எனக் காட்டும் அதானிக்கு முன்பு செபி தலைவர் மாதபி பூரிபூச் எந்த மூலைக்கு..? அரசின் ஒவ்வொரு அமைப்பையும் அதானிக்கு கீழே கொண்டு செல்லும் சூழ்ச்சியின் துவக்க புள்ளியே..இது; செபி தலைவர் மாதபி புச்சும், அவரது கணவரும் பெர்முடா மற்றும் மொரிஷியஸை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் ...

”பாஜக மாபெரும் வெற்றி பெறும். அதையடுத்து பங்கு சந்தை தாறுமாறாக உயரவுள்ளது. ஆகவே, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என மோடியும், அமித்ஷாவும் அறிவித்த இரண்டே நாளில் சுமார் 30 லட்சம் கோடிகளை பங்கு சந்தையில் மக்கள் இழந்ததன் பின்னணியில் நடந்தது என்ன? ஆதாயம் அடைந்தவர்கள் யார்..? பங்கு சந்தை ஜூன் 3 ந்தேதி செயற்கையாக ஒரு ஏற்றம் கண்டது. தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4 அன்று மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது! இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் பணம் இழந்தது  குறித்து ராகுல்காந்தி ...

தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளாராம்! “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய பாய்ச்சல்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்! உண்மை தான்! ஆனால், இது பின்னோக்கிய பாய்ச்சல்! இந்தக் கட்டுரை தற்போதைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உடனடி முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால், ‘இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் பல மாநிலங்களில் நடப்பதே..’ என முழுமையாகப் படித்து முடிக்கும் போது ...

உலகின் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே மூன்று வங்கிகள் திவாலாகி உள்ளன! இவை எப்படி திவாலாகின? என்னென்ன காரணங்கள்? அமெரிக்க மக்களும், அரசும் இவற்றை எப்படி அணுகுகின்றன? இதன் எதிர் வினையாக இந்தியா என்ன பாதிப்பை சந்திக்கும். இந்திய வங்கிகள் பலமாக உள்ளனவா..? ஒரு அலசல்! உலகம் முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது! அடுத்தடுத்து என ஒரே வாரத்தில், அமெரிக்காவின் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. திவாலானதில் மிகப் புகழ் பெற்ற பெரிய வங்கி, சிலிக்கான் வேலி வங்கியாகும். ...

ஒரு தனி நபரின் பகாசூர மோசடிகளுக்கு துணை போன ஒரு பிரதமரையும், ஆட்சி நிர்வாகத்தையும் இந்தியா இது வரை கண்டதில்லை! ஒரு சாதாரண  அதானியை, உலக பணக்காரனாக்க பாஜக அரசானது சட்டம், விதிமுறைகள் அனைத்தையும் வளைத்து, நீதித் துறையையும் கறைபடுத்தியது அம்பலப்பட்டு உள்ளது! இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் குழுமம் அதானியின் ஷேர்கள் அதிரடியாக சரிவை சந்தித்ததில் 4,25,000 கோடிகள் இழப்பை சந்தித்துள்ளது. மோடிக்கு மிக நெருக்கமானவரான குஜராத்தின் கௌதம் அதானியின் கம்பெனி ஷேர்கள் சரிந்ததற்கு  அமெரிக்காவை சார்ந்த ஹின்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் ...

நடுத்தர வர்க்க மாதாந்திர சம்பளக்காரர்களுக்கு கிடைக்கும் சம்பளமே போதுமானதில்லை. அதே சமயம், ஆண்டுக்காண்டு கணிசமான தொகை வருமான வரிக்கு போய்விடுகிறது. சட்ட பூர்வமாக வருமான வரியில் இருந்து விலக்கு பெற செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? வருமான வரி கட்டுபவர்கள் மார்ச் மாதம் வந்தால் எப்படி வரி சேமிக்கலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலானோர் சொல்லும் யோசனை இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள் போதும். வரிப் பணத்தை சேமிக்கலாம் என்பது தான்! வரி சேமிப்பிற்கு என்று சில திட்டங்கள் ...

வங்கி வைப்பு தொகைக்கு அதிகபட்சம் 5.5 % வட்டி வழங்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்கள் 12% வருமானம் தருகிறது. சில திட்டங்கள் 12% க்கும் அதிகமாக வருமானம் வழங்குகிறது. மியூச்சுவல் பண்டில் என்னென்ன திட்டங்கள் உள்ளன! இது பாதுகாப்பானதா? நீண்ட கால திட்டத்தில் நாம் இருந்தால் 12% வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் வங்கி வைப்பு நிதியில் கொஞ்சம் பணமும், மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் பணமும் முதலீடு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் Large Cap Fund, Mid Cap Fund, Small Cap ...