நான் 20 நூல்கள் எழுதி இருந்தாலும், தற்போது சில மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் நான் எழுதிய கட்டுரைகள் நூல் வடிவம் காணத் தொடங்கின! இவை பற்றி சில தகவல்கள்; உலக நாடுகளில் தமிழர்கள், கண்டதும் கேட்டதும், சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், நெஞ்சு பொறுக்குதில்லையே உடைபடும் மாயைகள், விடை தேடும் வினாக்கள், சங்கராச்சாரியார் கைது – குழப்பங்களும் விளங்கங்களும், சன் குழுமச் சதிகளும் திமுகவின் திசை மாற்றமும், சங்கராச்சாரியாரும், இந்து மதமும் – மறைக்கப்பட்ட உண்மைகள், எத்தனை காலம் ...

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை திமுக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? திமுக அரசின் மீது, முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பாசம், அக்கறை என நான் ஆச்சரியப்படுகிறேன். ஆளுநர் தன்னுடைய கர்ண கடூரமான, முட்டாள்தனமான, ஏற்றுக் கொள்ளவே முடியாத அடாவடி பேச்சுக்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் தன்பால் திருப்பிக் கொள்கிறார்! எதையாவது அடிக்கடிப் பேசி, நம் அனைவரையும் சரியாக உசுப்பிவிடுகிறார்! அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு அதுவே நமது ...

க.செபாஷ்டின், வேலூர் உழைத்தவர்களை ஓரம் கட்டி ஒண்ட வந்தவர்களுக்கு அரியாசனம் தருகிறது தலைமை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அங்கலாய்துள்ளாரே? திமுக தொண்டர்கள் பலரின் குமுறலாக அவர் வெளிப்பட்டுதாகவே கருதுகிறேன். அதிமுக தலைமை கழித்துக்கட்டிய எச்ச.சொச்சங்களைக் கொண்டு தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ன? அதிமுகவில் இருந்து வந்த எட்டு பேருக்கு தற்போது அமைச்சர் பதவி! இது போல மாவட்டம் தொடங்கி ஒன்றியம்,வட்டம் வரை அதிமுகவில் இருந்து வந்தவர்களே திமுகவை ஆக்கிரமித்துள்ளனர். சொந்தக் கட்சிக்காரனுக்கு சூனியம்! அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு ...