நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. ...

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, சக்கரை வியாதி ஆகியவற்றுக்கான மருந்துகளை தயாரித்து வந்த தமிழகத்தின் IDPL ஐ – மிக முக்கிய மருந்துகள், மிக மலிவான விலையில் அரசு தயாரிப்பதை தடுக்க தனியார் நிறுவனங்கள் அழுத்தம்தந்ததால் –  பாஜக அரசு முடக்கியுள்ளது. அதை தமிழக அரசு ஏற்று நடத்த அந்த நிறுவனமும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தயங்குகிறதா தமிழக அரசு..? என்ன நடந்தது..? காய்ச்சலைப் போக்கும் பாரசிட்டமால், சீரண கோளாறுகளுக்கு அல்மாஜெல், சர்க்கரை வியாதிக்கு மெட்பார்மிண் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட  மருந்துகளை, சென்னை நந்தம்பாக்கத்தில் ...

வழக்கத்திற்கும் அதிகமாகவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன! திமுக அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளதன் விளைவாகவே இதை பார்க்க முடிகிறது. இன்றைய கவர்னர் உரையில் வரவேற்கதக்க முதல் அம்சம் ஒரு திராவிட இயக்க அரசாங்கத்திற்கு இசைவாக கவர்னர் பேசியுள்ளார் என்பதே! எனினும், இது சந்தர்ப்ப சூழலுக்காக அவரது உதடு உரைக்கும் வார்த்தைகளே  என்ற புரிதல் இல்லாமல் நாம் புளகாங்கிதமடைந்துவிடக் கூடாது! நீட் தேர்வு ரத்து முயற்சிகள், உழவர் சந்தை, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், ...

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெற்று வருவது அளப்பறிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி,விவசாய கூலிகள் போன்றோரின் குழந்தைகளுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ்சீட் கிடைத்தது போன்ற செய்திகளெல்லாம் நம் மனதில் ஏற்படுத்தும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! ஆயினும், இந்த மகிழ்ச்சிகிடையில் சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது. ஒரு வகையில் இந்த 7.5% ஒதுக்கீடு என்பது நமக்கு பெருமை தரக்கூடியதல்ல,சிறுமையே! இதை தான் இந்த கட்டுரையில் கூறவுள்ளேன். அரசு பள்ளிகளின் அவல நிலைக்கு குறிப்பாக அவசியமான பல சப்ஜெக்ட்களுக்கு கூட ஆசிரியர்கள் ...

தமிழகம் ஊழலில் உச்சபட்ச சாதனைகளைப் படைத்துக் கொண்டுள்ளது என்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகளே அத்தாட்சியாகும்! ஏற்கனவே இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து உள்ளன. தலைமைப் பொறியாளர் நியமனம் தொடங்கி,அடிமட்டத் துப்புறவுப் பணியாளர் நியமனம் வரை எல்லாவற்றிலும்,கையூட்டு,லஞ்சம் என ஊழலில் ஊறித் திளைக்கும் வேலுமணிக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் இவர் தலையில் நன்றாகக் கொட்டு வைத்துள்ளது! உள்ளாட்சி அமைப்புகளை உதாசீனப்படுத்தி,உள்ளாட்சிகளின் தேவைகளை அறியாமலும், உரிமைகளை மதிக்காமலும்,பணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளாட்சித் துறை டெண்டர் விட்ட 2,369 கோடி அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பஞ்சாயத்து ராஜ் ...