”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை  பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ...

வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை. தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.? தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்! மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், ...

அன்பு நண்பர்களே, நமது வாசக நண்பர்கள் சிலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்றை நடைமுறைப் படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்! ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன! அவற்றில் ஒன்று அல்லது இரண்டு விவகாரத்தை மட்டுமே விளக்கி கட்டுரை எழுதுகிறீர்கள். மற்ற பல விஷயங்களில் உங்கள் நிலைபாடு என்ன என்று தெரிவதில்லை! ஆகவே கேள்வி,பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என்பது சில வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்! சில விஷயங்களை நேரமின்மை காரணமாக நான் எழுத வாய்ப்பில்லாமல் கடக்கும் போது ஒரு சிலர் வேண்டுமென்றே ...

வேகமாக ஓராண்டு உருண்டோடிவிட்டது! நினைத்தால் பிரமிப்பாக உள்ளது! இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறோம். ஓராண்டுக்கு முன்பு இந்த நாள் தான் அன்புத் தம்பி கவின் (Invalai) அறம் இணைய தளத்தை அழகுற வடிவமைத்துக் கொடுத்தார்! என்னுடைய 36 வருட பத்திரிகை துறையில் இந்த ஓராண்டு மிகக் கடினமானது. பெரும் உழைப்பாற்றலை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளியது! மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததும் கூட! அரசியல்,சமூகத் தளங்களில் கட்டமைக்கப்படும் மாயைகளைக் களைந்து,கள யதார்தங்களை வெளிப்படுத்துவது, வெகுஜன தளத்தில் பேசத் தயங்கி, மறைக்கப்படும் உண்மைகளை உரத்துச் சொல்வது ஆகிய ...

வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்! ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…! எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன். ...

இன்று ஏழாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது அறம்! எந்தச் சார்புமற்று, யதார்த்தங்களை, பொதுநல பார்வையோடு எழுதுவதை வாசிப்பதற்கும் ஒரு கணிசமான வாசகர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை அறம் உருவாக்கியுள்ளது! இது ஒரு சிற்றிதழ் தான்! எனினும் இதன் வீச்சு பல தளங்களிலும் எதிரொலிக்கிறது என்றால், உண்மையை நேசிக்கும் வாசகர்கள் இதனை பார்வர்டு செய்து பல தளங்களுக்கும் கொண்டு சேர்ப்பது தான்! இன்றைய தினம் அறம் இணைய தளத்திற்குள் வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது என்பதானது அறம் சார்ந்த வாசகர்களின் ஆர்வத்தை தான் ...

இது ரஜினி பிறந்த நாளுக்கான சிறப்பு பதிவல்ல! யதேச்சையாக அந்தி மழை இதழின் யூடியுப் சேனலுக்காக தம்பி, பத்திரிகையாளர் தமிழ் கனல் என்னை நேர்காணல் செய்தார். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வெளிப்பட்டவிதம்,பிறகு அவருக்கு ஒரு சூப்பர்ஸ்டார் இமேஜ் கட்டமைக்கப்பட்ட போது எப்படி அவரது அணுகுமுறைகள் மாற்றம் கண்டண என கூறியுள்ளேன். அரசியல், ஆன்மீகம் குறித்த அவரது புரிதல்கள், அவரது இயல்பு…ஆகியவற்றை குறித்த என் மதிப்பீடுகளை இதில் பகிர்ந்துள்ளேன்! ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்,மாயைகள் எப்போது எந்த காலகட்டத்தில் இருந்து தொடங்கி, பிழைப்புவாத இதழியல் துறையின் ...

www.aramonline.in மூன்றாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது..! பொய்மைகளாலும்,மாயைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஊடகச் சூழலுக்குள் ஒளிபாய்ச்சும் ஒரு சிறு அகல்விளக்காய் அறம் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சுடரின் வீரியத்தை நீங்கள் நாளும் பல கட்டுரைகளில் பார்த்து வருகிறீர்கள்! பரப்பியும் வருகிறீர்கள்! பொது நலன் சார்ந்து, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் வெளிவரும் அறம் இணைய இதழை தொடர்ந்து வரச் செய்வது வாசகர்கள் பங்களிப்பில் தான் உள்ளது. சமூகத்திற்கான தேவை என்னவென்று நாம் உழைத்துக் கொண்டிருந்தால், நமக்கான தேவையை அந்த சமூகமே அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ளும் என்ற ஒரு ...