மலேசிய இந்தியர்களில் 85% தமிழர்களாக உள்ளனர். ஆனால், இந்திய அரசு இங்கு ஏனோ அதிகாரிகளாக தமிழர்களை நியமிப்பதில்லை.தூதரகத்தை நாடும் தமிழர்களை வட இந்திய அதிகாரிகள் அலைக்கழித்தல், அவமானப்படுத்தல் தொடர்கிறது! மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை மலேசியா தமிழர்களிடம் திணிக்க துடிக்கிறார்கள்! மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும் இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் ...

வட இந்திய தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து கலவரம்! இந்த செய்தி பல ஊடகங்களில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. சில ஊடகங்கள் செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர்! விசிக, நாம் தமிழர் அமைப்புகளோ வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர்! இதை எப்படி அணுகுவது? ஈரோடை தலைமையிடமாக கொண்டு, எஸ்.கே.எம்., என்ற புகழ் பெற்ற நிறுவனம் இயங்கி வருகிறது. பூர்ணா ஆயில் என்ற பெயரில் அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பல வகை எண்ணெய்கள் உற்பத்தி, கால்நடை ...

பாஜக அரசு புதிதாக யோகா கல்வியை உருவாக்கி, அதை பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வி வரை கொண்டு வந்துள்ளனர்! நல்லது தான்! ஆனால், இதற்குள் இந்துத்துவ சித்தாந்ததை எப்படியெல்லாம் நுட்பமாக நுழைக்கின்றனர்  என்பது தான் திகைப்பூட்டுகிறது! இந்தியா முழுமைக்கும் பள்ளிக் கல்வி முதல் உயர் மருத்துவக் கல்வி வரை தங்களது சித்தாந்தங்களை மறைமுகமாக கொண்டு செல்லும்  முன்னத்தி ஏர் ஆக  இந்த யோகா கல்வியை துல்லியமாக வடிவமைத்தது தான் அவர்களின் மாஸ்டர் பிளானாகும்! இதை சற்று விரிவாக பார்ப்போம்; வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ...

முப்படைத் தளபதி மறைந்துவிட்டதால், அவர் குறித்த உண்மைகளையும் சேர்த்தே மறைத்துவிட முடியாது. பிபின் ராவத் சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்கும் கவுன்டர் இன்சர்ஜன்சி நடவடிக்கையில் புகழ்பெற்றவர்! ராணுவத்தின் அப்பட்டமான அத்து மீறல்களை ஆதரித்தவர்..! அகால மரணம் , விபத்து, அதையொட்டிய அனுதாபம் இயற்கையானதே! ராணுவ உடுப்பின்மீதும், ராணுவ வீரன் மீதும் மக்களுக்கு உள்ள இயல்பான ஈர்ப்பும் , மரியாதையும் ஒருவகைப்பட்டதாகும். கடமைக்காக உயிர் துறக்கும் ராணுவ வீரர்களின் தீரத்தின் மீது ஒருவித ஈர்ப்பும், மரியாதையும், அனுதாபமும் ஏற்படுகிறது. இதில் வியப்பில்லை. மலர் வளையமும், அஞ்சலியும் ...

கலைத்துறை சார்ந்த யாரும் யோசித்தே பார்த்திராத ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து மிக சுவாரஷ்யமாக கதை சொல்ல முயற்சித்ததற்கு ஒரு சபாஷ் இயக்குனர் இளமாறனுக்கு! இறந்து போன பிணத்தில் ஏற்படும் மத அடையாளச் சிக்கல் உருவாக்கும் இயல்பான குழப்பங்கள், தடைகள், அதைத் தொடர்ந்து உருவாகும் பதற்றம் ஆகியவை சிறப்பாகக் காட்சிபடுத்தப் பட்டுள்ளன! கடைசி வரை ஒரு சுவரெழுத்து ஓவியன் எப்படி கொலை செய்யப்பட்டான்? ஏன் செய்யப்பட்டான்? எதனால் அந்த கொலை நடந்தது என்ற மர்மம் விலக்கப்படவே இல்லை. இப்ராஹிம் என்பவர் சரோஜா என்ற ...

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற சில பிரிவினர் மற்றவர்கள் பார்வையிலேயே படக்கூடாது. ...

என்ன பெரிசா நடந்துவிட்டது..? ஜவகர்லால் நேரு புகைப்படம் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் முதல் வரிசையில் இடம் பெறவில்லை..! அவ்வளவு தானே…? இதுக்கே இப்படி குதித்தால் எப்படி.? இன்னும் மகாத்மா காந்தியை விட்டு வைச்சிருக்கோம்..அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..? வீரசாவர்க்கர் போன்ற மகான்கள் வரிசையில் காந்திக்கும் இடம் தரப்பட்ட பெருந்தன்மையை போற்ற வேண்டாமா? பாட புத்தகங்களில் ரவீந்திரநாத் தாகூரையே காலி பண்ணியாச்சு..இன்னும் என்னென்னவோ இருக்கே..! இந்த ரீதியில் தான் பாஜக அரசு பயணப்பட்டுக் கொண்டுள்ளது..! இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் என்பது ஒன்றிய கல்வி ...