தமிழக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இந்துத்துவ சக்திகளின் அரசியல் அஜந்தாக்களை நிறைவேற்றத் துணை போகிறதோ..? என திகைக்க வைக்கும் சம்பவங்கள்! திசை மாறுகிறதா திராவிட மாடல்? கள்ளக்குறிச்சி சம்பவம் தொடங்கி, பிரதமர் மோடி வருகை வரை ஒரு பார்வை! ”நடப்பது திராவிட மாடல் ஆட்சியாக்கும்” என்று அது குறித்த பெருமிதங்களையும், கற்பிதங்களையும் மேடைகளில் எழுத்துக்களில் தொடர்ந்து கட்டமைத்து வந்தது திமுக! ஆனால், நடைமுறையோ அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ‘விட்டுக் கொடுத்து போவது’, ‘விரோதமில்லாமல் நடந்து கொள்வது’ என்றால், அதில் தவறு ...

சமகால அரசியல்,சமூகம் குறித்து ஒரு தெளிந்த பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஜன கண மன! காவல் துறையின் என்கெண்டர், கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடுகள், ஊடக மற்றும் சோஷியல் மீடியாக்களின் போக்குகள், அனல் பறக்கும் நீதிமன்ற வாதங்கள் என்பதாக வந்திருக்கும் தரமான படம்! “என் மாணவர்கள் தான் என் அடையாளம்” என்று அர்ப்பணிப்போடு கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியையான சபா மரியம் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்! பேராசிரியையின் எரிக்கப்பட்ட உடலை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அன்று இரவே, பேராசிரியை வன்புணர்வு செய்து கொளுத்தப்பட்டதாக எல்லா ...

9,000 கோடிகள்! அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள்..ஆகிய முக்கூட்டுக் கொள்ளைக்காகவே மேக்கேதாட்டு அணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் காங்கிரஸ், பஜக, மஜத ஆகிய கட்சிகள் தமிழகத்தை எதிர்த்து தங்களை ஹீரோவாக்கிக் கொள்ள மேகேதாட்டுவிற்கான போராட்டங்களை செய்கிறார்கள்! அதாவது ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன அன்றி இதில் பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காகவல்ல! சமீபத்தில் கர்நாடகவில் இழந்து கொண்டிருக்கும் தன் செல்வாக்கை மீட்க  காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை ...

ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள்..என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக நகராட்சி தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் அதிர்ச்சியளிக்கின்றன! இவற்றைப் பார்க்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கும், உரிமைக்கும் பல ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் நம்மைப் போன்றவர்களுக்கு அயர்ச்சியே ஏற்படுகிறது! நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்கு தரும் அங்கீகாரமா உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்! இது தொண்டு செய்வதற்கான ...

மிகப் பிரம்மாண்ட 216 அடி இராமானுஜர் சிலையின் உள் நோக்கம் என்ன? பெருமாளுக்கு இல்லாத பெருமையை இராமானுஜருக்கு ஏன் தருகிறார்கள்? அவர் உண்மையில் சீர்திருத்தவாதியா? எனில், அவரை பின்பற்றும் ஜீயர்களும், ஆச்சாரிகளும் ஏன் சமத்துவம் பேணவில்லை? இராமானுஜரை முன்னெடுக்கும் சமூக, கலாச்சார, அரசியல் என்பது என்ன? 1,400 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டத்தை முன்னெடுத்து ஐம்பொன்களால் ஆன சிலை, அதன் பீடத்தில் 54 தாமரை இதழ்கள், தலா 18 சங்குகள்,சக்கரங்கள், 36 யானைகள்,இசை நீரூற்று, 108 கோவில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு உள்ளன. இவ்விழாவிற்காக யாகங்கள், ...

கலைத்துறை சார்ந்த யாரும் யோசித்தே பார்த்திராத ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து மிக சுவாரஷ்யமாக கதை சொல்ல முயற்சித்ததற்கு ஒரு சபாஷ் இயக்குனர் இளமாறனுக்கு! இறந்து போன பிணத்தில் ஏற்படும் மத அடையாளச் சிக்கல் உருவாக்கும் இயல்பான குழப்பங்கள், தடைகள், அதைத் தொடர்ந்து உருவாகும் பதற்றம் ஆகியவை சிறப்பாகக் காட்சிபடுத்தப் பட்டுள்ளன! கடைசி வரை ஒரு சுவரெழுத்து ஓவியன் எப்படி கொலை செய்யப்பட்டான்? ஏன் செய்யப்பட்டான்? எதனால் அந்த கொலை நடந்தது என்ற மர்மம் விலக்கப்படவே இல்லை. இப்ராஹிம் என்பவர் சரோஜா என்ற ...

அடேங்கப்பா.. ஆடிய ஆட்டமென்ன..? பேசிய பேச்சுக்கள் என்ன…? கட்டமைத்த பிம்பங்கள் என்ன…? எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு தந்துவிட்டார்கள்! தன் சுயபலத்தை உணராத இந்த சூனியத் தலைமைகள் ஏதோ தமிழகத்தின் எதிர்காலத்தையே தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் போல – வெற்றி தோல்விகளே இவர்களிடம் விலாசம் வாங்கித் தான் பயணிக்கும் என்பது போல – அளந்துவிட்டார்கள்! அதுவும் இந்த தேமுதிக காட்டிய திமிர் இருக்கே..! அப்பா, யப்பா அப்பப்பா…! ஆனானப்பட்ட கேப்டனே ஆப் ஆயிட்டாரு எனும் போது இந்த அல்லகைகள் அமைதி காத்து அடக்கமாக இருந்திருந்தால் கூட, ...

‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி!  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி, பிராமணீயத்திற்கு எதிராக களமாடினார்! அதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டார்! பெண்கள் பற்றிய அவரது பார்வை நுட்பமானது….! புத்தரது கருத்துகளை அக்கால சமூக, பொருளாதார பின்னணியோடு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல். காஞ்ச அய்லய்யா  ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் பேராசிரியராக இருந்தவர்; செயற்பாட்டாளர். அம்பேத்கரை தனது  வழிகாட்டியாக கொண்டவர். அவருடைய ‘God ...

‘’சார், தினமலர்ல இருந்து பேசறோம்..இந்த..ஆ.ராசா..இப்படி ஆபாசமா பேசியிருக்காறே..அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க…?’’ ‘’என்ன பேசியிருக்கார்..தெரியலையே.. அதாங்க…,முதல்வர் இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கார்..அது பற்றி உங்க கருத்து வேணும்’’ ‘’நான் பார்க்கலையே எனக்கு ஒன்னும் தெரியாது…’’ ‘’அதான்ங்க..இன்னைக்கு எங்க தினமலரில் கூட போட்டு இருந்தோமே..உங்களுக்கு வேணா வாட்ஸ் அப்பிலே அனுப்புகிறோம்..படிச்சுட்டு சொல்றீங்களா…’’ ‘’நீங்க தினமலரா? இதுக்கு முன்னாடி எந்தெந்த விவகாரத்திற்கெல்லாம் எங்கிட்ட கருத்து கேட்டீங்க..எதுவுமே கேட்டதில்லை. இது என்ன புதுசா கேட்கிறீங்க..’’ ‘’அப்படி இல்லீங்க..அரசியல்ல கண்ணியமா பேசணுமில்லையா..ஆனா, அவரு கண்டபடி இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றித் ...

ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்! அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்! இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் ...